மதுரையில் தெரு மாடுகளின் தொல்லைக்கு எதிரான மனு மீதான நிலை அறிக்கை கோரப்பட்டது. வழக்கு தொடர்ந்த மதுரையைச் சேர்ந்த எஸ்.பிரகாஷ், தெருவிலங்குகள், குறிப்பாக கால்நடைகள், போக்குவரத்து மண்டலங்களில் நகரத்தில் சுற்றித் திரிவதால், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெரு மாடுகளுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு மீதான நிலை அறிக்கையைத் தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கோரியிருக்கிறது.
குறிப்பாக கால்நடைகள், போக்குவரத்து மண்டலங்களில் நகரத்தில் சுற்றித் திரிவதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என வழக்கு தொடர்ந்த மதுரையைச் சேர்ந்த எஸ்.பிரகாஷ் கூறியிருக்கிறார். இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகள் காயமடையும் அல்லது இறக்கும் பல விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற தெருக் கால்நடைகள் பிளாஸ்டிக் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் கழிவுகளை உட்கொள்வதால் அவற்றின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது, என்றார். விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960ன்படி, பொது வீதிகளில் கால்நடைகள் நடமாடுவதைத் தடுக்கும் கடமை அரசுக்கு உள்ளது எனக்கூறிய அவர், இப்பிரச்னைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
மேலும் மதுரை மாநகரில் சாலைகள் மற்றும் போக்குவரத்து மண்டலங்களில் நடமாட அனுமதிக்கப்படும் வளர்ப்பு பிராணிகளின் உரிமையாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறான விலங்குகளை பிடித்து முறையான உணவு மற்றும் மருத்துவ வசதி அளிக்கும் 'கோசாலா'க்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க