பிற துறைகளைச் சேர்ந்த தணிக்கையாளர்களை நியமித்து கோயில் நிதியை தணிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பான கோப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) அலுவலகம் கட்டுவதற்காகக் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க: TNPL ஆக்கிரமிப்பு மரங்களை வேரோடு அழிக்க திட்டம்!
கோவில் நிதியினைத் தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து, ஆர்வலர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆடிகேசவலு அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச் வியாழக்கிழமை விசாரித்து உத்தரவிட்டது. பிற துறைகளைச் சேர்ந்த தணிக்கையாளர்களை நியமித்து கோயில் நிதியை தணிக்கை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அடைந்துள்ளது, இந்த வழக்கு.
கோவில் நிதியை குறிப்பிட்ட கோவிலின் நோக்கங்களுக்காக செலவிட வேண்டும், பொது நிதியை வழக்கு செலவுகளுக்கு செலவிடக்கூடாது. நிதியை இவ்வாறு பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று மனுதாரர் குற்றம் சாட்டினார். பொது நிதி பயன்பாடு குறித்த விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படாததால் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், திருவானைக்காவல் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகியவற்றுக்கு சொந்தமான நிலத்தை, துறையினர் ஆக்கிரமித்து, இணை கமிஷனர் அலுவலகங்கள் கட்டியதாக, கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், ரமேஷ் குற்றம்சாட்டினார். அவரது வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க
அரசின் முந்தைய திட்டங்கள் என்ன ஆனது என விவசாயிகள் கேள்வி!
பழங்குடியின விவசாயிகளுக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிப்பு!