Credit : Dinamalar
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு (Agri laws) எதிராக டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதற்காக அவர்கள் அந்த பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தீ விபத்து:
அந்தவகையில் சிங்கு எல்லையில் விவசாயிகள் அமைத்திருந்த கூடாரம் ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட தீ, பின்னர் கூடாரம் முழுதும் பரவியது. சம்பவத்தின் போது அங்கே சுமார் 12 பேர் இருந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடினர். அவர்களால் முடியாததால் பின்னர் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் இந்த சம்பவத்தில் கூடாரம் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் 5 செல்போன்கள், 20 நாற்காலிகள், 20 மெத்தைகள் மற்றும் உணவு பொருட்களும் எரிந்து நாசமாயின.
விவசாயி காயம்
மேலும் தீயை அணைக்க போராடியதில் விவசாயி ஒருவரும் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவல்களை விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (Samyukta Kisan Morcha) தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாந்திர வருவாய் பெற வாய்ப்பு!
விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்! நிரந்தர தீர்வு கேட்டு விவசாயிகள் கோரிக்கை