News

Saturday, 14 August 2021 02:13 PM , by: R. Balakrishnan

Cultivation area will be increased

தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் (Tamilnadu Agri Budget) அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (Mk Stalin) தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

வேளாண் பட்ஜெட்

வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பொது பட்ஜெட்டைப் போலவே வேளாண் பட்ஜெட்டும் இ-பட்ஜெட்டாக (E-Budjet) தாக்கல் செய்யப்பட்டது.

வேளாண் துறைக்கான பட்ஜெட் வாசிக்க தொடங்கியது முதலே பல்வேறு திட்டங்களை அறிவித்து வந்தார்.

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் தொடங்கப்படுகிறது. இதேபோல் இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோர் ஆக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இயற்கை வேளாண்மை

  • வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • அரசு விதைப்பண்ணைகள் மூலம் ரூ.25 லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி மையம் அமைக்கப்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறுதானியப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்க ரூ.35.8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தரிசு நிலங்கள்

தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பனை வெல்லம்

பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பனை மேம்பாடு இயக்கம் தொடக்கம் என்றும் வேளாண் துறை அமைச்சர் கூறியுள்ளார். பனை மரத்தை வெட்டும்போடு ஆட்சியரின் அனுமதி பெறுவது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் பனை மரத்தை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)