வங்கித்துறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், கேரளாவில் தனது முதல் மகளிர் வங்கி கிளையை ஹெச்.டி.எப்.சி துவங்கியுள்ளது. முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எப்.சி தனது முதல் மகளிர் கிளையை கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள செரூட்டி சாலையில் திறந்துள்ளது.
மகளிர் வங்கி (Women Bank)
வங்கி கிளையை கோழிக்கோடு மாநகராட்சி மேயர் பீனா பிலிப் நேற்று திறந்து வைத்தார். புதிய வங்கி கிளையில் 4 பெண்கள் பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளடக்கிய வங்கியின் தென் மண்டல தலைவர், சஞ்சீவ் கூறுகையில், 'வங்கியின் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நடவடிக்கையின் மற்றுமொரு உதாரணமாக அனைத்து மகளிர் வங்கி கிளை துவங்கப்பட்டுள்ளது' என்றார்.
வங்கியின் பன்முகத்தன்மை மற்றும் சமவாய்ப்பு கொள்கைக்கு வலு சேர்க்கும் வகையில், தென்னிந்தியாவில் முதல் அனைத்து மகளிர் கிளை துவங்கப்பட்டுள்ளதாக HDFC வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
மார்ச் 31, 2022 நிலவரப்படி, ஹெச்.டி.எப்.சி வங்கியில் 21.7 சதவீதம் பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2025க்குள் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
எல்ஐசி-யில் மீண்டும் வருகிறது மெடிக்ளைம் பாலிசி!
அனைத்து விதமான வரிகளுக்கும் ஒரே ரசீது வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை!