1. செய்திகள்

அனைத்து விதமான வரிகளுக்கும் ஒரே ரசீது வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Sigle Receipt for all taxes

நூற்றாண்டு விழாவை கொண்டாடி முடித்த பாரம்பரியமான நகராட்சிகளில் விருதுநகர் மாவட்டமும் ஒன்றாகும். முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தலைவராக இந்த நகராட்சியில் மக்கள் பணியாற்றியுள்ளார் என்ற பெருமையும் உண்டு. தற்போது விருதுநகர் நகராட்சியில் சுமார் 26,000 வீடுகள் உள்ளன. இதில் சுமார் 15,000 குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளும், சுமார் 7,000 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

வரி (Tax)

ஒவ்வொரு வீட்டிற்கும் சொத்துவரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி மற்றும் பாதாள சாக்கடை கட்டணங்கள் தனித்தனியே வசூலிக்கப்பட்டு வருகிறது. இதை மாற்றியமைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்திலிருந்து கடிதம் வந்துள்ளது. அதாவது, சொத்துவரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் என அனைத்திற்கும் ஒரே எண் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட ரசீதில் பொதுமக்களிடம் பணத்தை வசூலிக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையத்தில் உள்ள அனைத்து அலுவலரிடமும் பணத்தை செலுத்தலாம். ஆனால், விருதுநகர் நகராட்சியில் தற்போது வரை அந்த நடைமுறையை அதிகாரிகள் பின்பற்றவில்லை. அத்திட்டத்தை அமுல்படுத்தவும் இல்லை. இதன் காரணமாக ஒவ்வொரு வரியினத்திற்கும் ஒவ்வொரு வகையான ரசீதுகள் அச்சடிக்கப்படுகின்றன.
இதனால், நகராட்சிக்கு மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களும், சொத்து வரி மற்றும் குப்பை வரிகளை மட்டும் பாக்கியின்றி செலுத்தும் நிலை உள்ளது. குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை கட்டணங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் பெரும் சுமையாக மாறி வருகின்றன. பொதுமக்களிடம், ஒரே நேரத்தில் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

நிதி இழப்பு (Finance Loss)

ஆனால், பணம் இல்லாத காரணத்தால், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை கட்டணங்களை பொதுமக்கள் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதேவேளை, தமிழகத்தில் உள்ள ஏராளமான நகராட்சிகளில் ஒரே ரசீது மூலம் அனைத்து வரியினங்களையும் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், நூற்றாண்டு விழா கண்ட விருதுநகர் நகராட்சியில் மட்டும் இந்த நடைமுறையை அதிகாரிகள் அமல்படுத்த மறுத்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, விருதுநகர் நகராட்சியில் உடனடியாக அனைத்து வரியினங்களையும் ஒரே ரசீது மூலம் செலுத்தும் முறையை அமுல்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க

வருமான வரி ரிட்டர்ன் இன்னும் வரவில்லையா? அப்போ உடனே இதைப் பண்ணுங்க!

உங்கள் PF பென்சன் பற்றி தெரிந்து கொள்ள இதை ஃபாலோ பண்ணுங்க!

English Summary: Single Receipt for All Types of Taxes: Public Demand! Published on: 18 August 2022, 08:54 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.