மாட்டுப்பொங்கல் திருநாளை ஒட்டி மீன் வாங்க அதிகாலையிலிருந்து மீன் பிரியர்கள் அலை மோதுவதால் இன்று மீன் விற்கும் துறைமுகங்களில் மீன் விலை அதிகரித்து இருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு வழங்குகிறது
மாட்டுப்பொங்கல் திருநாளை ஒட்டி முன்னோர்களுக்கு பிடித்த அசைவ உணவு வகைகள் படைத்து வழிபாடு நடத்த மீன்பிடி துறைமுகங்களில் மீன்களை ஏராளமான பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் படிக்க: ரூ. 100 போதும்! ரூ. 16 லட்சம் லாபம் பெற இன்றே விண்ணப்பியுங்க!!
உழவுக்கு உதவி செய்யும் வகையில் உற்ற நண்பனாக இருக்கக் கூடிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டு பொங்கல் நாளில் முன்னோர்களுக்கு விருப்பமான அறுசுவை உணவு, அசைவ உணவு வகைகள் படைத்து வழிபாடு நடைபெறும் என்பதால் நாகை மீன்பிடி துறைமுகங்களில் மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.
நாகை மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்களால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான மீன் பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் மீன்களை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், கோடியக்கரை, வேதாரண்யம் முதலான 27 மீனவர்கள் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 700 விசைப்படகுகள் ஆகியன கடலுக்குச் சென்று மீன் பிடித்து விற்பனை செய்கின்றனர்.
முன்னரே கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கரை திரும்பி வருகின்றனர். அவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்குவதற்காக மீன்பிடி துறைமுகத்தில் வியாபாரிகள் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இன்று மாட்டுப்பொங்கல் மற்றும் தொடர்ந்து வரும் விடுமுறை நாள் என்பதால் வெளிமாநில வியாபாரிகள் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் வருகை தருகின்றனர்.
இதேபோன்று நாகை, வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர், திருமருகல் முதலான பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகமான பொதுமக்கள் அதிகாலை முதலே மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்கி செல்கின்றனர். மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. வழக்கமாக 550 முதல் 800க்கு விற்பனையான வஞ்சிரம் தற்பொழுது ரூ. 1000-த்திற்கும், சீதா ரூ.400-க்கும், துள்ளு கெண்டை ரூ250-க்கும், நெத்திலி மீன் ரூ.200-க்கும், இரால் ரூ350க்கும் விற்பனையாகி வருகிறது.
மேலும் படிக்க
லட்சக்கணக்கில் லாபம் தரும் செடி! இன்றே நடவு செய்யுங்க!!
Expo ONE 2023: வடகிழக்கு இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய ஆர்கானிக் கண்காட்சி!