News

Thursday, 11 May 2023 08:17 AM , by: R. Balakrishnan

Fixed Deposit

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் சீனியர் சிட்டிசன்களுக்கான வைப்பு நிதி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. பிரபல நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் சீனியர் சிட்டிசன்களுக்கு வைப்பு நிதித் திட்டத்தில் (Fixed Deposit) வட்டி விகிதத்தை 0.40% வரை உயர்த்தியுள்ளது. இதன்படி, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் வைப்பு நிதிக்கு சீனியர் சிட்டிசன்கள் 8.6% வரை வட்டி பெற முடியும்.

வட்டி உயர்வு (Interest hike)

உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் இன்று (மே 10) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் சீனியர் சிட்டிசன்களுக்கு 44 மாதங்களுக்கான வைப்பு நிதி திட்டத்துக்கு 8.6% வட்டி வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 44 மாதங்களுக்கு 8.35% வட்டி வழங்கப்படும்.

பஜாஜ் பைனான்ஸ் (Bajaj Finance)

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 36 மாதம் முதல் 60 மாதம் வரையிலான வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது. ஐந்து ஆண்டு வைப்பு நிதி திட்டத்துக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு 8.30% வட்டியும், பொது வாடிக்கையாளர்களுக்கு 8.05% வட்டியும் வழங்குகிறது பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம்.

புதிய வட்டி (சீனியர் சிட்டிசன்களுக்கு):

  • 12 - 23 மாதம் : 7.65%
  • 15 மாதம் - 7.7%
  • 15 - 23 மாதம் : 7.75%
  • 18 மாதம் : 7.65%
  • 22 மாதம் : 7.75%
  • 24 மாதம் : 7.8%
  • 25 - 35 மாதம் : 7.6%
  • 30 மாதம் : 7.7%
  • 33 மாதம் : 8%
  • 36 - 60 மாதம் : 8.3%
  • 44 மாதம் : 8.6%

புதிய வட்டி (பொது வாடிக்கையாளர்களுக்கு):

  • 12 - 23 மாதம் : 7.4%
  • 15 மாதம் - 7.45%
  • 15 - 23 மாதம் : 7.5%
  • 18 மாதம் : 7.4%
  • 22 மாதம் : 7.5%
  • 24 மாதம் : 7.55%
  • 25 - 35 மாதம் : 7.35%
  • 30 மாதம் : 7.45%
  • 33 மாதம் : 7.75%
  • 36 - 60 மாதம் : 8.05%
  • 44 மாதம் : 8.35%

மேலும் படிக்க

ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்களுக்கு அதிக கட்டணம்: IRCTC நடவடிக்கை!

வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்த எண்ணில் இருந்து போன் வந்தால் எடுக்க வேண்டாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)