1. செய்திகள்

ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்களுக்கு அதிக கட்டணம்: IRCTC நடவடிக்கை!

R. Balakrishnan
R. Balakrishnan
Higher Food Charges at Railway stations

ரயில்களில் பயணம் செய்ய பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால் ரயில் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. அப்படி நீங்களும் அடிக்கடி ரயில்களில் பயணம் செய்து, உணவு மற்றும் பானங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் சிரமப்பட்டால், இந்த செய்தி உங்களுக்கு நிம்மதியைத் தரும்.

புதிய உத்தரவு

தற்போது ஐஆர்சிடிசி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஐஆர்சிடிசி பிறப்பிதுள்ள புதிய உத்தரவுக்குப் பிறகு, உணவுப் பொருட்களின் விலையில் பயணிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். விற்பனையாளர்களுக்கு ஐஆர்சிடிசி அளித்துள்ள உத்தரவில், உணவுடன் தனி விலை சேர்த்து விற்பனையாளர்கள் உணவுகளை விற்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு விற்பனை செய்வதில் உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, மே 5ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை விற்பவர்கள் கூடுதல் கட்டணம் விதிக்கும் பழக்கத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என்று IRCTC எச்சரித்தது. இதைத் தடுக்க, நெரிசல் அதிகம் உள்ள 10 வழித்தடங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு விற்பனையாளர்கள் செய்யும் எதேச்சதிகாரத்துக்கு முட்டுக்கட்டை போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், எம்பிஆர் விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பிரீமியம் ரயில்களில் IRCTC சார்பாக மேலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் இன்னும் சில முக்கிய ரயில்களில் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதை ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் பயணம் செய்யும்போது எந்தவிதமான சிரமங்களையும் எதிர்கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தின் கீழ், உணவுப் பெட்டிகளில் எளிதாகக் காணக்கூடிய இடத்தில் கட்டண விவரம் இடம்பெறும்.

புகார் அளிக்கலாம்

பயணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி, கட்டணங்களை கேட்பதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கலாம் எனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. தரம் மற்றும் அளவு தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால், அதை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பயணிகள் புகார் செய்யலாம்.

ரயில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான விசாரணையில், விற்பனையாளர்கள் 100 ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு உதவும் சோலார் உலர்த்தி: தேனி விவசாயிகள் ஆர்வம்!

இன்சூரன்ஸ் பாலிசி விதிகளில் மாற்றம்: இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!

English Summary: Higher food charges at railway stations: IRCTC action! Published on: 10 May 2023, 09:05 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.