நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 December, 2021 10:27 AM IST
For cylinder holders, Insurance up to Rs 50 lakh

விறகு அடுப்பில் வெந்த காலம் மாறி இப்போது அனைவரது வீட்டிலுமே சுகாதாரமான சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அரசு தரப்பிலிருந்தும் நிறைய சலுகைகள் வழங்கப்படுக்கிறது. அரசு திட்டங்களில், இலவச சிலிண்டர் திட்டம், சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட நிறைய சலுகைகள் இடம் பெறுகின்றன. இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு மூலை முடுக்கெங்கும் பரவி வருவதைக் காணலாம்.

சமையல் சிலிண்டருக்கு காப்பீடு வசதியும் உள்ளது. அது நிறைய மக்களுக்கு தெரியவில்லை. ஏனெனில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திடீரென வெடிக்கக் கூடிய அபாயமும், நம்மிடையே இருந்து வரும் ஒரு பிரச்சனை தான்.

அவை இயல்பாகவே பாதுகாப்பானவை என்றாலும், வாடிக்கையாளர்களின் கவனக் குறைவால் ஏதேனும் அசம்பாதிவிதங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இதற்கேன காப்பீட்டு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. சிலிண்டர் இணைப்பை வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பிலிருந்து, அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு உதவியை வழங்குவதற்காக முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுடன் பெட்ரோலியம் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன, என்பது குறிப்பிடதக்கது. வாடிக்கையாளருக்கு சிலிண்டர் வழங்கப்படும்போதே அதன் நிலை குறித்து முதலில் பரிசோதனை செய்யப்படும், அதன் பின்னரே வழங்கப்படும். அதன் பின்னர், ஏதேனும் விபத்து அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால் அதற்கு காப்பீடு வழங்கப்படுகிறது. பொருட்சேத்திற்கு ரூ.2 லட்சம் வரையில் காப்பீடு கிடைக்கும்.

சிலிண்டர் விபத்து ஏற்பட்டால், முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் சிலிண்டர் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிலிண்டர் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு FIR காப்பி, மருத்துவமனை ரசீதுகள், இறப்பு ஏற்பட்டால் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் போன்றவை சமர்பிக்க வேண்டியது அவசியம்.

விபத்துகள் பல நடந்து வரும் நிலையில், இவ்வாறான காப்பீடு நமக்கு தேவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க:

Flipkart Sale: அட்டகாசமான ஆஃபரில் ஸ்மார்ட்வாட்ச் - 60% வரை தள்ளுபடி

ஆன்லைனில் மாடித் தோட்டத்திற்கான விதைகள் மற்றும் செடிகள் மானிய விலையில்!

English Summary: For cylinder holders, Insurance up to Rs 50 lakh
Published on: 29 December 2021, 10:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now