Krishi Jagran Tamil
Menu Close Menu

சுகாதாரமான மாட்டு தொழுவம் அமைக்க சில வழிமுறைகள்

Wednesday, 24 October 2018 12:21 PM

மாட்டுத் தொழுவமும் அதன் சுகாதாரமும்:

 • மாட்டுத் தொழுவமானது சற்று உயரமான இடத்தில் தெற்கு வடக்காக இருக்குமாறு அமைத்தல் வேண்டும். 
 • நல்ல சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் இருக்க வேண்டும். 
 • மழை நீர், கழிவு நீர் ஆகியவை இயற்கையாக வழிந்தோட ஏற்ற முறையில் இருக்க வேண்டும்.
 • மாட்டுத் தொழுவத்தின் தரையானது வழவழப்பற்ற கோடுகள் அடிக்கப்பட்ட சிமெண்டுடன் செங்கல் மற்றும் பாறைகளின் மேற்பகுதியை சொர சொரப்பாக்கிய பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். 
 • இவ்வாறு செய்வதால் தரை கழுவ வசதியாகவும், கழுவிய நீர் தேங்காமலும், வழுக்காமலும் இருக்கும். 
 • மேலும் தரையில் தொடர்பு கொள்ளும் மடி, காம்புகள் ஆகியவற்றை நுண்ணுயிரிகள் தாக்கா வண்ணம் பாதுகாக்கப்படும்.
 • தொழுவங்களில் தீவனப் பாதை, தண்ணீர்த் தொட்டி, மாடு நிற்குமிடம், வடிகால் மற்றும் பால் கறவைப் பாதை ஆகியவை அமைத்திட வேண்டும். 
 • தீவனப் பாதையின் அகலம் 90 செ.மீ. தண்ணீர் தொட்டியின் அகலம் 20-30 செ.மீ அளவில் இருக்க வேண்டும். 
 • பால் கறவைப் பாதை அகலம் ஒற்றை வரிசையில் 90 செ.மீ – இரட்டை வரிசையில் 180 செ.மீ இருக்க வேண்டும். 
 • இரட்டை வரிசை தொழுவத்தில் மாடுகளின் தலை உள்பக்கம் நோக்கி இருக்குமாறு அமைப்பதை விட கட்டிடத்தில் வெளிப்பக்கம் இருக்குமாறு அமைத்தலே நல்லது.
 • உள்பக்கம் நோக்கி இருந்தால் மாட்டின் முகத்தை நோக்கி இருப்பதால் நோய் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு பரவ வாய்ப்புகள் அதிகம்.
 • கறவை மாட்டிற்கு முன்புறம் 1 மீட்டர் உயர சுவரும், 22 செ.மீ. இடைவெளியில் இரண்டு கம்பிகளும் பொருத்தப்பட்டால் போதுமானது. 
 • கூரையை தூண்கள் கொண்டு தாங்கச் செய்யவும். 
 • கூரை வெளிப்பகுதியில் குறைந்தது 508 செ.மீ. வெளியே நீட்டி இருக்க வேண்டும். இதனால் மழைச்சாரல் உள்ளே வராமல் தடுக்க முடியும்.
 • நம் நாட்டில் பொதுவாக தொழுவங்கள் மண் தரையாகவும் உயரம் போதுமானதாக இல்லாமலும், கழிவு நீர் செல்ல வசதிகள் இல்லாமலும் இருக்கின்றன. 
 • இத்தகைய சூழ்நிலையில் சுத்தமான பாலைப் பெறுவதற்கு இயலாமல் போகிறது.
 • தொழுவத்தில் தினசரி இரு முறை சாணத்தை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
 • சாணம் சரிவர அகற்றப்படாவிடில் ஈ, கொசு போன்ற பூச்சி இனங்கள் பெருக வழி வகுக்கும்.
Cattle shed

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

Latest Stories

 1. மண்பானை விற்பனை அதிகரிப்பு: வியாபாரிகள் மகிழ்ச்சி
 2. மண் வளத்தை காக்க சணப்பை சாகுபடி: துறை வல்லுநர்கள் ஆலோசனை
 3. களப்பயிற்சியுடன் கூடிய இலவச வகுப்பு: கால்நடை மருத்துவ பல்கலை கழகம் அறிவுப்பு
 4. கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அழைப்பு
 5. வேளாண் அறிவியல் நிலையம் நடத்தும் ஒரு நாள் இலவசப் பயிற்சி
 6. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்
 7. இதயக்கோளாறுகளை சரி செய்ய உதவும் இயற்கை நிவாரணி: சிக்கு என்னும் `சீமை இலுப்பை'
 8. குறைந்து வரும் உற்பத்தி: இழப்பை தடுக்க தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை
 9. கோடை விற்பனையை கருத்தில் கொண்டு விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி
 10. சங்க காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் ‘இடலை எண்ணெய்’ பற்றி தெரியுமா?

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.