தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்க போதுமான அளவு கொள்முதல் இல்லாத நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடி இருக்கிறது.
ரேஷன் கடைகள் (Ration Shops)
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில், அதன் மூலம் பல ஏழை எளிய குடும்பங்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக சிறு தானியங்கள் வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் தெரிவித்தார். அதன் படி முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்பட்டது. அதில் நீலகிரி மாவட்டத்தில் மாதம் 440 டன்னும் தர்மபுரியில் 920 டன் கேழ்வரகு தேவைப்படுகிறது.
இந்த மாவட்டங்களை சேர்த்து தமிழகம் முழுவதும் கொடுக்க மொத்தம் 2.23கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1 கிலோ கொடுக்க ஆண்டுக்கு 2.67 லட்சம் டன் தேவைப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் ஏக்கர் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. மீதம் தேவைப்படும் கேழ்வரகை இந்திய உணவு கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் படிக்க
மிக குறைந்த விலையில் தென்னை மரம் ஏறும் கருவி: புதுக்கோட்டை விவசாயியின் அனுபவம்!
பெனசன் இணையதளங்களை ஒருங்கிணைக்கும் மத்திய அரசு: அமைச்சர் தகவல்!