1. விவசாய தகவல்கள்

மிக குறைந்த விலையில் தென்னை மரம் ஏறும் கருவி: புதுக்கோட்டை விவசாயியின் அனுபவம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Coconut tree climbing equipment

இந்தியாவில் 21 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தென்னை விவசாயிகளுக்கு மரம் ஏறுவது என்பதே பெரிய சவலான விஷயமாக இருந்து வருகிறது. மரம் ஏறுவது என்பது கீழே இருந்து பார்க்கும் அளவுக்கு சுலபமான விஷயம் இல்லை. முன்பெல்லாம் கிராமங்களில் சிறுவர்களுக்கு கூட மரம் ஏறும் பழக்கம் இருந்தது. ஆனால், இப்போது மரம் ஏறுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதற்கு தீர்வாக கொண்டு வரப்பட்டது தான் தென்னை மரம் ஏற பயன்படுத்தக்கூடிய கையடக்க கருவி.

தென்னை மரம் ஏறும் கருவி

தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததும் இவர்களுக்கு கூலியும் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தென்னை, பனை, பாக்கு உள்பட கிளையில்லாத அனைத்து உயரமான மரங்களிலும் ஏறுவதற்கான விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்தது தான் இந்த தென்னை மரம் ஏறும் கையடக்க கருவி. இவை தற்போது சந்தைகளில் ரூ.3 ஆயிரம் முதல் கிடைக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நடராஜன்(55) கூறுகையில், நான் ஒரு 50 மரங்கள் வைத்துள்ளேன். வருடத்திற்கு ஆறு முறை தென்னை மரங்களில் இருந்து காய்களை பறிப்போம்‌. அதில் ஒவ்வொரு முறையும் காய் வெட்டும் தொழிலாளர்களுக்கு ரூ.2500 கூலி தொகையாக வழங்க வேண்டிய உள்ளது. மேலும் சரியான நேரத்தில் தொழிலாளர்களும் வருவதில்லை. இதனால் தேங்காய் கீழே விழுந்து வீணாவதும் உண்டு. முன்பெல்லாம் நானே மரம் ஏறினேன் ஆனால் தற்போது வயதாகிய நிலையில் மரத்தில் ஏற முடியவில்லை அதனால் ஒவ்வொரு முறையும் கூலிக்கு ஆள் வைத்து தேங்காய்களை வெட்டி வந்தேன்.

கூடுதல் வருமானம்

பின்னர் தெரிந்தவர் மூலம் அதற்கு ஆலோசனை கேட்டு இந்த கருவியை 3000 ரூபாய்க்கு ஆர்டர் செய்து வாங்கினோம். அதன் பின்னர் ஒரு நாளிலேயே இதில் ஏறுவதற்கு பழகிக் கொண்டேன். தற்போது நானே ஏறி தேங்காய்களை பறித்து விடுகிறேன். இந்த கருவி மூலம் ஆட்கூலி செலவு குறைவதால் ரூ.15,000 வருடத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது. மேலும் இது பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கிறது. ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் என அனைவரும் இதனை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க

நானோ மீன் இயற்கை உரம் தயாரித்து தென்னை விவசாயி அசத்தல்!

மா ஏற்றுமதி மண்டலம் அமைக்க கிருஷ்ணகிரி விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Very Cheap Coconut Tree Climbing Equipment: Pudukottai Farmer's Experience! Published on: 08 March 2023, 01:35 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.