தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச ஸ்கூட்டர் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் அதற்கான ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலவச ஸ்கூட்டர் (Free Scooter)
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாதம் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பேரவையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 13 புதிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. அதன் படி ஒரு கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு 500 பயனாளிகளுக்கு ரூ. 4.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்த ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்தினர்களுக்கு 4% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்புவதற்கு, அந்தந்த துறைகள் மூலம் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
ரயில் பயணிகளே உஷார்: எச்சரிக்கை விடுக்கும் IRCTC!
தமிழ்நாட்டில் தபால் மூலம் ஓட்டுநர் உரிமம்: போக்குவரத்து துறை அறிவிப்பு!