1. செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்: எச்சரிக்கை விடுக்கும் IRCTC!

R. Balakrishnan
R. Balakrishnan
IRCTC Warning

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோரை ஏமாற்றும் வகையில் சில மோசடி கும்பல்கல் கிளம்பியுள்ளன. இந்த கும்பல்களால் ரயில் பயணிகளின் பணம் கொள்ளை போகும் அளவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனம் பயணிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

மோசடி கும்பல்கள்

ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பிரபலத்தை தவறாக பயன்படுத்தி ரயில் பயணிகளிடம் பணத்தை கொள்ளை அடிக்க சில மோசடி கும்பல்கள் முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது போலியான ஐஆர்சிடிசி ஆப்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

போலி ஐஆர்சிடிசி ஆப் (Fake IRCTC App)

தற்போது ஐஆர்சிடிசி பெயரில் 'irctcconnect.apk' என்ற போலி ஆப் பரப்பப்பட்டு வருகிறது. டெலிகிராம், வாட்சப் போன்ற தளங்கள் வழியாக இந்த போலி ஆப் பரப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இது ஒரு போலியான ஆப் எனவும், இந்த ஆப் பயன்படுத்தினால் பயனாளிக்கு ஆபத்து ஏற்படும் எனவும் ஐஆர்சிடிசி தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த போலி ஆப் வாயிலாக பயனாளியின் வங்கி கணக்கு, யுபிஐ, ஏடிஎம் கார்டு போன்ற விவரங்கள் திருடப்பட்டு பணம் கொள்ளை போகக்கூடும் என ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது.

உண்மையான ஆப் (Real App)

போலிகளிடம் ஏமாறாமல் ரயில் பயணிகள் தங்கள் மொபைலில் Google Play Store அல்லது Apple App store வாயிலாக ‘IRCTC Rail Connect' ஆப் மட்டும் டவுன்லோடு செய்து பயன்படுத்துமாறு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தபால் மூலம் ஓட்டுநர் உரிமம்: போக்குவரத்து துறை அறிவிப்பு!

இயற்கை விவசாயத்திற்கு மவுசு: திருப்பதி லட்டு இனி இப்படித் தான் தயாரிக்கப்படும்!

English Summary: Train passengers beware: IRCTC will issue a warning! Published on: 17 April 2023, 03:57 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.