பெட்ரோல், டீசல் முதலானவைகளின் விலை ஏற்றத்தினாலும், சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் சுங்க வரிக் கட்டணத்தின் விலை ஏற்றத்தாலும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.
பொதுவாக, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிர்ணயம் செய்து வருகின்றன.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் 22-ம் தேதி மீண்டும் உயர்த்தப்பட்டது. இதற்கிடையே, ரஷியா-உக்ரைன் போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விலை 51 சதவீதம் எனும் நிலையைத் தாண்டி உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. எனவே, மக்களின் அத்தியாவசிய பொருட்களான, சமையல் எண்ணெய், எரிவாயு , காய்கறிகள் என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது.
அதோடு சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் சுங்க வரியும் உயர்வு அடைந்துள்ளது. சுங்க வரியின் காரணமாகவும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது.
பழங்களின் ஏற்றுமதி, இறக்குமதியில் சுங்க வரி மைய இடம் வகிக்கிறது. சுங்க வரியின் ஏற்றத்தாலும் பழங்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது என பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழைய விலை – புதிய விலை
சிம்ளா ஆப்பில் ரூ.140 - 160
சாத்துக்குடி ரூ. 45-65 - 80
ஆரஞ்சு ரூ. 60-80 - 100
கோடைக்காலப் பழங்களான, தர்பூசணி, வெள்ளரி முதலான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் காரணமாக பழங்களை வாங்கும் மக்களின் வரத்துக் குறைந்துள்ளது. ஆனால் இதே நிலை நீடித்தால் பழங்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதென பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க...