100 நாள் வேலை திட்டதிற்கு நிதி குறைக்கப்பட்டது. பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் செய்ய உள்ளனர். இன்று 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அரசு பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை சென்ற ஆண்டை விட 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு பலதரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்.
இதனைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று சமூக ஆர்வர்லர்கள் போரட்டம் நடத்த உள்ளனர். 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1 ஆம் தேதி தாக்கல் செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்ற ஆண்டு ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 33% குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது பயனாளர்களுக்கு கடும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 60 ஆயிரம் கோடி நிதி குறைவாக நடப்பு நிதியாண்டில் குறைக்கப்பட்டுள்ளதால் பயனாளர்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாகினர். இந்தியா முழுவதும் கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திட்டத்தின் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு நூறு நாட்கள் வேலை வழங்கப்பட்டு அதற்கான சம்பளம் வழங்கப்படுகிறது.
கிராமங்களில் வசிக்கும் எளிய ஏழை மக்களுக்கு பெரியளவில் பயனளிக்கிறது இந்த 100 நாள் வேலை திட்டம். இம்முறை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டு இருப்பது, பல்வேறு பாதிப்புகளையும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும் எனக்கூறி பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு கூறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்களும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் திட்ட பயனாளிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் படிக்க
என்னது 60 வருஷமா தூங்கலாயா????
ஒரு டி ஒன்பது கோடிப்பு! - உலகத்திலேயே விலையுயர்ந்த தேநீர்