பட்ஜெட் 2023: பெண்கள் 7.5 % வட்டி பெறலாம், அரசுக்கு குவியும் பாராட்டு

Deiva Bindhiya
Deiva Bindhiya
மகிளா சம்மன் பச்சத் பத்ரா திட்டம்
Budget 2023: Mahila Samman Bachat Patra Scheme, Women can get 7.5% interest, Appreciation for the government

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பட்ஜெட் 2023-24 நிதியமைச்சர், பெண்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கும் நோக்கத்தில், மகிளா சம்மான் பச்சத் பத்ரா யோஜனாவை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதில் பெண்கள் 2 லட்சம் சேமிப்பு கணக்கு தொடங்கி, 7.5% வட்டி கிடைக்கபெறலாம். இந்த அறிவிப்பில் இருந்து அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

புது தில்லி, ஆன்லைன் டெஸ்க். பெண்களுக்கான பட்ஜெட் 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தை தொடங்க உள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார், இது பெண்களுக்கான மிகப்பெரிய பரிசு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் பெண்களின் 2 லட்சம் சேமிப்புக்கு 7.5% வட்டி கிடைக்கும். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மகிளா சம்மான் சேமிப்புக் கடிதத் திட்டம் (மகிளா சம்மன் பச்சத் பத்ரா யோஜனா)

மகிளா சம்மான் பச்சத் பத்ரா யோஜனா மூலம் நாட்டின் பல பெண்கள் இப்போது கணிசமான சேமிப்புகளைச் செய்யலாம். பெண்களுக்கான இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், இப்போது ஒரு பெண் அல்லது பெண் குழந்தை பெயரில் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு 7.5% வட்டி வழங்கப்படும் மற்றும் இந்த திட்டம் மார்ச் 2025 வரை பொருந்தும் என்பது குறிப்பிடதக்கது.

இந்த திட்டத்தின் மூலம் இரண்டு வருடத்திற்கான சேமிப்பு கணக்கில் ரூ.2 லட்சம் வைப்பு வைத்து, 7.5 சதவீத வட்டி பெறலாம்.

மேலும், இந்த திட்டத்தை இரண்டு வருடத்தில் எப்போதும் வேண்டுமென்றாலும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நிதியமைச்சர் என்ன அறிவிப்புகளை வெளியிட்டார்

  • பெண்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.
  • பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
  • குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்.
  • குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக டிஜிட்டல் நூலகங்கள் தயார் செய்யப்படும்.
  • தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் 81 லட்சம் சுயஉதவி குழுக்களுடன் கிராமப்புற பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
  • சுயஉதவி குழுவை அடுத்த கட்ட பொருளாதார மேம்பாட்டிற்கு கொண்டு செல்ல பெரிய உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

மேலும் படிக்க:

பட்ஜெட் 2023 Updates: இந்த நிதியாண்டின் திட்டங்கள் என்ன?

#Budget2023: விவசாயக் கடன் இலக்கு ரூ. 20 லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிடல்

English Summary: Budget 2023: Mahila Samman Bachat Patra Scheme, Women can get 7.5% interest, Appreciation for the government Published on: 01 February 2023, 02:50 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.