மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 December, 2020 1:19 PM IST
Credit : registrationwala

இந்த கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையிலும் விவாசயத்தொழிலை லாபகரமானதாக மாற்ற மத்திய -மாநில அரசுகள் அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக பிரதமர் மோடியின் அரசும் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், தற்போதைய விவசாய வணிகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளது. நீங்களும் விவசாயம் அல்லது அதைச் சார்ந்த துறைகளில் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? அப்படிஎன்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.

இப்போது, விவசாயி, விவசாயத்துடன் இணைந்த ஒருவர் அல்லது அதில் சேர விரும்பும் ஒருவர் புதிதாக விவசாய வர்த்தக வணிகத்தை தொடங்க விரும்பினால் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த தொகையை அக்ரி கிளினிக் (Agri Clinic) மற்றும் அக்ரி வணிக மைய திட்டம் (Agri Business center scheme) மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கடன் பெற நினைப்பவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி வகுப்பு தேவைப்படும். அதன் பின்னர் நீங்கள் தகுதியுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டால் நபாரட் வங்கி (NABARD வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி) கடன் வழங்கும்.

Read This 

தீபாவளி பரிசாக ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க அரசு முடிவு?

அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி வணிக மைய திட்ட சலுகைகளைப் பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

விவசாய வணிகம் தொடர்பான பயிற்சிக்கு ஒரு கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். அந்த பயிர்சி மையங்கள் அனைத்தும் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் (MANAG - National Agricultural Extension Management Institute) அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிறுவனம் மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது

 

அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி வணிக மைய திட்ட கடன் தொகையும் & மானியமும்!

பயிற்சி முடிந்ததும், விவசாயம் அல்லது அதைச் சேர்ந்த ஒரு தொழிலைத் தொடங்க விண்ணப்பதாரர்களுக்கு நபார்டில் (NABARD Bank) இருந்து கடன் வாங்க முழு உதவி வழங்கப்படும். வேளாண் தொழிலைத் தொடங்க, விண்ணப்பதாரர்களுக்கு (தொழில் முனைவோர்) ரூ .20 லட்சம் வரையிலும், ஐந்து நபர்கள் அடங்கிய குழுவுக்கு ரூ .1 கோடி வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. இதில் கூடுதலாக, பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 36% மானியமும், பிற்படுத்தப்பட்ட பிரிவின், பழங்குடி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 44% மானியமும் வழங்கப்படுகிறது.

அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி வணிக மைய திட்டத்தின் குறிக்கோள்கள்

வேளாண் பட்டதாரி, முதுகலை அல்லது டிப்ளோமா படிப்பை முடித்த ஒருவர் விவசாயம் தொடர்பான வர்த்தக வணிகங்களைச் செய்ய உதவும் வகையில், மத்திய அரசு இந்த கடன் உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், மேலும் அந்த பகுதியின் விவசாயிகளையும் முன்னேற்ற முடியும் அரசு நம்புகிறது.

இந்தத் திட்டம் குறித்து மேலும் தகவல்களை அறிந்துகொள்ள விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும். வேளாண் வணிகம் குறித்த கூடுதல் தகவலுக்கு, கட்டணமில்லா எண் - 1800-425-1556, 9951851556 ஐ தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க..

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

PM Kisan திட்டத்தின் 7வது தவணை விரைவில்! விவசாயிகளே இன்றே விண்ணப்பித்திடுங்கள்!

விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் கொள்முதல்!

English Summary: Get 36% Subsidy on Rs 20 Lakh Loan by NABARD here the Direct Link to Apply for Profitable Agriculture Business
Published on: 13 October 2020, 06:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now