நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 August, 2022 2:31 PM IST
Golden Bonds

Sovereign gold bond scheme எனப்படும் மத்திய அரசின் தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றன. இத்திட்டத்தில், தங்கத்திற்கான விலை முன்னதாகவே நிர்ணயிக்கப்படும். கூடுதலாக செய்கூலி, சேதாரம் என எதுவும் கிடையாது. எனவே இப்பத்திரங்களில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி வாயிலாக அதிக வருமானம் ஈட்டிக்கொள்ளலாம்.

தங்கப் பத்திரம் (Golden Bonds)

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் விலை உயர உயர வட்டி வாயிலாக அதிக இலாபமும் உங்களுக்குக் கிடைக்கும். தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்கி எட்டு ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். எட்டு ஆண்டுகள் முடிந்த பின்னர் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை. எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது என்றாலும், அவசரத் தேவை ஏற்பட்டால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் பத்திரத்தை விற்று பணத்தை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அந்த நேரத்தில் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.

தங்க முதலீட்டுப் பத்திரங்களுக்கான விற்பனை அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 22) முதல் தங்க முதலீட்டுப் பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2022 ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீங்கள் பத்திரங்களை வாங்க முடியும். ஆன்லைன் மூலமாகவும் பத்திரங்களை வாங்கலாம்.

ஆன்லைன் மூலமாக நீங்கள் வாங்கினால் கிராமுக்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கப் பத்திரத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5,197 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

டிஜிட்டல் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறைகள் என்னென்ன?

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

English Summary: Gold Bonds Sale From Today: Invest Good Profits!
Published on: 22 August 2022, 02:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now