News

Tuesday, 06 December 2022 08:24 PM , by: T. Vigneshwaran

Gold Coin ATM

ஏடிஎம் எந்திரத்தில் பணம் மட்டும்தான் இதுவரை வந்து கொண்டிருக்கிறது. ஆனால், முதல்முறையாக, பணத்துக்குப் பதிலாக தங்க நாணயம் வரும் ஏடிஎம் எந்திரம் ஹைதராபாத்தில் நேற்று நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாமல்லா உலகிலேயே தங்க நாணயம் வழங்கும் முதல் ஏடிஎம் இதுவாகத்தான் இருக்க முடியும். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ஓபன்கியூப் டெக்னாலஜிக் நிறுவனம் இந்த தங்க நாணயம் வழங்கும் ஏடிஎம் எந்திரத்தை நிறுவியுள்ளது.

இதன்படி இந்த ஏடிஎம் எந்திரத்தில் மக்கள் 5 கிலோ வரை தங்க நாணயங்களை தங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் வாங்க முடியும். தங்க நாணயமமும், 0.5 கிராம், 10 கிராம், 100 கிராம் தங்க நாணயங்களாக வரும்.

கோல்ட்சிகா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரதீப் கூறுகையில் “ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எங்கள் நிறுவனம் கமாடிட்டி மார்க்கெட்டிங்கில் ஈடுபட்டு வருகிறது. ஏடிஎம் மூலம் தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை எங்கள் சிஇஓ அறிமுகம் செய்யலாம் என்று யோசித்தார், அதை செயல்படுத்தினோம். இதற்காக ஓபன் கியூப் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு செயல்படுத்தினோம்

ஒவ்வொரு ஏடிஎம்மிலும் 5 கிலோவுக்கு தங்க நாணயம் இருப்பு இருக்கும், இதன் மதிப்பு ரூ.3கோடி. ஏடிஎம்களில் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை நாணயம் கிடைக்கும். 0.5 கிராம், ஒரு கிராம், 2 கிராம், 5 கிராம், 10 கிராம், 20 கிராம், 50 கிராம், 100 கிராம்களில் நாணயத்தை பெறலாம். தங்க நகைக்கடையில் நாணயங்களை வாங்குவதற்கு பதிலாக இந்த ஏடிஎம்களில் தங்க நாணயங்களை வாங்கலாம். இந்த தங்க நாணயங்கள் அனைத்தும் 24 கேரட், 999 சான்றிதழ் பெறப்பட்டதால் அச்சம் தேவையில்லை

ஒருவேளை பணம் எடுக்கப்பட்டு, தங்க நாணயம் வராவிட்டால், அடுத்த 24 மணிநேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பணம் கணக்கில் சேர்க்கப்படும். இதற்காக தனியாக வாடிக்கையாளர் சேவை மையம் அமைத்துள்ளோம்.

மேலும் படிக்க:

ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை

மாடுகள் அதிகம் பால் தரணுமா, இதை ட்ரை பண்ணுங்க!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)