தங்கம் விலை இரண்டு வார உச்சத்தை எட்டிய நிலையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எங்கு ஒதுக்குவது என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை தங்கம் விலையில் சரிவுக்கு வழிவகுத்தது. இதனால், கடந்த வாரம் ஏற்றம் கண்ட தங்கம், தற்போது குறையத் துவங்கியுள்ளது.
இன்று சில்லறை சந்தையில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து ரூ.55,800 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து ரூ.60,900 ஆகவும் உள்ளது. மேலும், ஆபரணத் தங்கத்தின் விலை "சவரன்" ஒன்றுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,640 ஆக உள்ளது. வெள்ளியின் தற்போதைய விலை ரூ.79,300.
10 கிராம் 22 காரட் தங்கத்தின் முக்கிய இந்திய நகரங்களில் விலை பின்வருமாறு: சென்னை - ரூ.55,800, மும்பை - ரூ.55,400, டெல்லி - ரூ.55,550, கொல்கத்தா - ரூ.55,400, பெங்களூர் - ரூ.55,450, ஹைதராபாத் - ரூ.55,400, கேரளா - ரூ.55,400, புனே- ரூ.55,400, பரோடா- ரூ.55,450, அகமதாபாத்- ரூ.55,450, ஜெய்ப்பூர்- ரூ.55,550, லக்னோ- ரூ.55,550, கோவை- ரூ.55,800, மதுரை- ரூ.55,800.
இதேபோல், 10 கிராம் 24 காரட் தங்கத்தின், முக்கிய இந்திய நகரங்களில் விலை பின்வருமாறு: சென்னை - 60,900, மும்பை - 60,450, டெல்லி - 60,600, கொல்கத்தா - 60,450, பெங்களூர் - 60,500, ஹைதராபாத் - 60,450 , கேரளா - 60,450, புனே - 60,450, பரோடா - 60,500, அகமதாபாத் - 60,500, ஜெய்ப்பூர் - 60,600, லக்னோ - 60,600, கோவை - 60,900, மதுரை - 60,900.
முதலீட்டாளர்கள் சீனா மற்றும் ஜப்பானின் மத்திய வங்கிகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர், ஏனெனில் அவை தற்போதைய வட்டி விகிதங்களை உயர்த்தாமல் பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், முதலீட்டாளர்கள் அமெரிக்க பணவீக்க தரவு வெளியீட்டிற்காக காத்திருக்கும் அதே வேளையில் அமெரிக்க பத்திர சந்தையின் மீது தங்கள் கவனத்தை திருப்புகின்றனர். இந்த கவன மாற்றத்தால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில், சர்வதேச சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 1,967 டாலராக குறைந்து 1,960.75 டாலராக இருந்தது. இருப்பினும், திங்கட்கிழமை, அது $1,963 லிருந்து $1,954 ஆகக் குறைந்து $1,961க்கு திரும்பியது.
தற்போது, ஒரு அவுன்ஸ் 24 காரட் தங்கம் $1,960 ஆக விற்கப்படுகிறது, இது இந்திய ரூபாயில் தோராயமாக ரூ.161,635 ஆகும். இதேபோல், MCX சந்தையில் 24 காரட் தங்கத்தின் 10 கிராம் பார் 0.07% சரிவை சந்தித்தது, திங்களன்று ஃபியூச்சர் ஆர்டர்களில் 59,780 ரூபாயை எட்டியது. மேலும், 1 கிலோ வெள்ளியின் விலை 0.59 சதவீதம் குறைந்து ரூ.73,363 ஆக உள்ளது.
மேலும் படிக்க:
MSP Price Hike- நெல், பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்தியது அரசு
அரிசி, பருப்பு விலை கிடுகிடு உயர்வு- அரசுக்கு பாமக நிறுவனர் கேள்வி