1. செய்திகள்

MSP Price Hike- நெல், பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்தியது அரசு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
MSP Price Hike- cabinet raises MSP for kharif crops

2023-24 ஆம் ஆண்டுக்கான 14 காரிஃப் பயிர் அல்லது கோடையில் விதைக்கப்பட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

"விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் MSP- யில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய உயர்வாகும்என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

2023-24 ஆம் ஆண்டில், பொது மற்றும் கிரேடு ஏ உள்ளிட்ட இரு ரக நெல்களின் விலையும் ரூ.143 உயர்த்தப்பட்டுள்ளது. பருப்புக்கான MSP அதிகபட்சமாக ரூ.803 அதிகரித்து (10.4 சதவீத உயர்வு) குவிண்டாலுக்கு ரூ.8,558 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எள்ளின் விலை 10.3 சதவீதம் அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ.8,635 ஆகவும், நிலக்கடலை குவிண்டாலுக்கு 9 சதவீதம் உயர்ந்து ரூ.6,357 ஆகவும் இருந்தது. பருத்தியின் ஆதரவு விலை 8.9 சதவீதம் உயர்ந்து குவிண்டாலுக்கு ரூ.6,620 ஆகவும், பருத்தி (நீண்ட ஸ்டேபிள்) 10 சதவீதம் அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ.7,020 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜோவர், பஜ்ரா, ராகி, மக்காச்சோளம், துவரை, சூரியகாந்தி விதை மற்றும் சோயாபீன் உள்ளிட்ட பிற பயிர்களும் விலை உயர்வைக் கண்டன.

ஒன்றிய அரசின் கிசான் கிரெடிட் கார்டு, பிரதம மந்திரி சம்மன் நிதி யோஜனா, உரங்களுக்கான மானியங்கள், நல்ல விதைகள் கிடைப்பது, மின்சாரம் கிடைப்பது மற்றும் நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்துதல் போன்ற திட்டங்கள் இந்தியா விவசாயத்தில் முன்னேற உதவியுள்ளன என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“ஒரு விவசாயியின் இடுபொருள் செலவில் 50 சதவீதத்திற்கு மேல் MSP விலைகள் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்கிறது. கடந்த பல ஆண்டுகளின் உயர்வுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக” கோயல் மேலும் கூறினார்.

நெல் முக்கிய காரிஃப் பயிர் ஆகும், இதன் விதைப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. குவிண்டால் ஒன்றுக்கு 2040 ரூபாயாக இருந்த நெல் (பொதுவானது) மற்றும் 2060 ரூபாயாக இருந்த நெல் (கிரேடு ஏ) இரண்டிற்கும் 143 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இரு ரக நெல் வகைகளுக்கும் MSP 100 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

2022-23 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 330.5 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு 2021-22  உடன் ஒப்பிடும்போது 14.9 மில்லியன் டன்கள் அதிகமாகும்.

பஜ்ரா (82 சதவிகிதம்) மற்றும் துர் (58 சதவிகிதம்), சோயாபீன் (52 சதவிகிதம்) மற்றும் உராட் (51 சதவிகிதம்) ஆகியவற்றில் விவசாயிகளின் உற்பத்திச் செலவில் எதிர்பார்க்கப்படும் வரம்பு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, மீதமுள்ள பயிர்களுக்கு, விவசாயிகளின் உற்பத்திச் செலவில் குறைந்தபட்சம் 50 சதவீதம் MSP இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உர மானியங்களின் முக்கியத்துவம் மற்றும் விவசாயிகளுக்கு அதன் நன்மைகள் குறித்து வலியுறுத்திய கோயல், உரங்களின் விலை உலகளவில் அதிகரித்துள்ள போதிலும், மானியங்கள் விவசாயிகள் தங்கள் உற்பத்தியில் லாபம் ஈட்ட உதவியுள்ளன என்றார். "உலகெங்கிலும் உள்ள பெரிய தட்டுப்பாட்டுடன் உரங்களின் விலைகள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றாலும், அவை நியாயமான விலையிலும், போதுமான அளவுகளிலும் கிடைப்பதை இந்தியா உறுதிசெய்தது, இது இந்தியா அதிக உணவு தானிய உற்பத்தியை அடைய உதவியது," என்று அவர் கூறினார்.

மேலும் காண்க:

கரண்ட் பில் எடுக்க யாரும் வரமாட்டாங்க- ஸ்மார்ட் மீட்டர் குறித்து அமைச்சர்!

English Summary: MSP Price Hike- cabinet raises MSP for kharif crops Published on: 07 June 2023, 04:14 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.