News

Friday, 27 January 2023 09:56 PM , by: Elavarse Sivakumar

 தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை கடந்த ஆண்டு நவம்பர்  சவரன் ரூ.37,720-க்கு விற்கப்பட்டது. ஆனால்  2 மாதங்களில் சவரனுக்கு 5320 ரூபாய் அதிகரித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ரூ.37 ஆயிரம்

தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதத்துக்கு முன்பு வரை 1 சவரன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. சவரன் ரூ.38 ஆயிரத்துக்கு உள்ளேயே இருந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது.

2 மாதங்களாக

கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.38160-க்கு விற்கப்பட்டது. அடுத்த 6 நாட்களில் தங்கம் விலை ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. நவம்பர் 11-ந்தேதி 1 சவரன் தங்கம் ரூ.39240 ஆக உயர்ந்தது. டிசம்பர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. டிசம்பர் 2-ந்தேதி தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 சவரன் ரூ.40,160-க்கு விற்பனையானது.

ரூ.41 ஆயிரம்

தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கம் டிசம்பர் மாதம் 31-ந்தேதி சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 சவரன் தங்கம் ரூ.41,040 ஆக விற்கப்பட்டது.

அதன்பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த 9-ந்தேதி சவரன் விலை ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 சவரன் தங்கம் ரூ.42,080-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நோற்று சவரன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்கப்பட்டது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.43,040-க்கு விற்பனையாகிறது.

அதிர்ச்சி

தங்கம் விலை கடந்த நவம்பர் மாதம் 3-ந்தேதி பவுன் ரூ.37,720-க்கு விற்கப்பட்டது. 2 மாதங்களில் பவுனுக்கு ரூ.5320 அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 1 கிராம் தங்கம் ரூ.5345-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.5380-க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் இந்த விலையேற்றம் பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க…

பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)