தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ ரூ.40,000த்தைத் எட்டியுள்ளது. இந்த கிடுகிடு விலைஉயர்வு, தங்க நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது.
இதனிடையே ரஷியா- உக்ரைன் இடையேயான தாக்குதல்கள் தொடர்கின்றன.
போர் தொடங்கிய நாள் முதலே, பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியது.
இதன் எதிரொலியாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.4,873க்கும், ஒரு சவரன் ரூ.38,984க்கும் விற்பனையானது.
ஆனால் அதிரடியாக 776 ரூபாய் உயர்ந்து இன்று, ரூ.39,760 ரூபாக்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருவது, திருமணம் நடத்த உள்ளவர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரஷியா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக, பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரக்கூடும் என்று வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலையை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நடுத்தர மக்கள் சிறுக, சிறுக சேமித்து தங்கம் வாங்கும் நிலை உள்ளது. தற்போது தங்கம் மேலும் விலையேறினால், நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனி போன்று ஆகிவிடும். காய்கறி விலை ஏறினாலும், தங்கம் விலை ஏறினாலும் அது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தியாகவே அமைகிறது.
மேலும் படிக்க...
சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!
இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!