News

Thursday, 24 February 2022 11:23 AM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.39 ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ள நிலையில், விரைவில் சவரன் தங்கம் ரூ.40,000த்தைத் தாண்டும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த கிடுகிடு விலை உயர்வு, தங்க நகைப் பிரியர்களையும், இல்லத்தரசிகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது. தற்போது ரஷியா- உக்ரைன் இடையே போர் மூண்டுள்ளதால், பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியது.

இந்நிலையில் பிடிவாதமாக இருந்த ரஷ்யா தற்போது தன் விருப்பப்படி, உக்ரைன் மீதுத் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. இதன் எதிரொலியாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

விரைவில் ரூ.40,000

கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கம் நேற்று காலை ஒரு கிராம் ரூ.4,719க்கும், ஒரு சவரன் ரூ.37,752க்கும் விற்பனையானது.இதைத்தொடர்ந்து மாலையில், மீண்டும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.4951க்கும், ஒரு சவரன் ரூ.39608க்கும் விற்பனையானது.

இந்த விலை  உயர்வுத் தொரும் பட்சத்தில், ஓரிரு தினங்களில், ஒரு சவரன் தங்கம் ரூ.40,000த்தைத் தாண்டும் அபாயம் உருவாகியுள்ளது. 

திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருவது, திருமணம் நடத்த உள்ளவர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.ரஷியா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக, பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரக்கூடும் என்று வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலையை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நடுத்தர மக்கள் சிறுக, சிறுக சேமித்து தங்கம் வாங்கும் நிலை உள்ளது. தற்போது தங்கம் மேலும் விலையேறினால், நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனி போன்று ஆகிவிடும். காய்கறி விலை ஏறினாலும், தங்கம் விலை ஏறினாலும் அது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தியாகவே அமைகிறது.

மேலும் படிக்க...

புழக்கத்தில் போலித் தங்கம்- தரத்தைப் பரிசோதிக்க எளிய வழிகள்!

இதைச் செய்யாவிட்டால் உங்கள் PAN Card முடக்கப்படும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)