தங்கம் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. தங்கத்தின் விலையில் கடந்த சில தினங்களாக குறைவு ஏற்பட்டுக் கொண்டே வருகின்றது. அந்த வரிசையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலையினை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: இனி அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்!
ஜூன் மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், 160 ரூபாய் குறைந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது என்பது இன்னும் மகிழ்வைத் தரும் செய்தியாக உள்ளது.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குவியும் சலுகைகள்!
கடந்த ஜூன் 17-ஆம் தேதி தங்கம் ஒரு சவரனுக்கு 760 ரூபாய் குறைந்து ரூ. 37,920-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் சவரணுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 38,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும் படிக்க: ஓய்வூதியம் பெறுவோருக்குச் சூப்பர் நியூஸ்! அடுத்தடுத்த சர்ப்ரைஸ்கள்!!
இன்று ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு 256 ரூபாய் குறைந்துள்ளது. அதன் அடிப்படையில், ஒரு சவரன் 38,000 ரூபாய்க்கும் கீழே குறைந்து, 37,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4,733 ஆக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தினை வாங்கும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் படிக்க: தோட்டக்கலையில் மானியம் வேண்டுமா? இன்றே விண்ணபியுங்கள்!
தங்கத்தைப் போன்றே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.65,300 ஆக இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 65.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க