News

Tuesday, 19 April 2022 11:26 AM , by: Elavarse Sivakumar

தங்கம் விலை சவரனுக்கு 744 ரூபாய் குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது மாற்றம் காணப்படுவது சிறு ஆறுதலாக உள்ளது.

கடந்த வாரம் 12-ந்தேதி முதல் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து வந்தது. 12ம் தேதி ரூ.39,576-க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம்,
14-ந்தேதி தங்கம் விலை 40 ஆயிரத்தைக் கடந்தது. அதாவது, தமிழ்ப்புத்தாண்டு அன்று ஒரு சரவன் தங்கம் ரூ.40,096-க்கு விற்பனையானது. கடந்த 16-ந்தேதி அது ரூ.40,112 ஆக உயர்ந்தது.

விலையில் சரிவு

இந்த நிலையில் தங்கம் கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.744 குறைந்துள்ளது. அதாவது 19ம் தேதி பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.40,200 ஆக விற்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்து ரூ.40 ஆயிரத்துக்கு கீழே இறங்கியது. இன்று பவுனுக்கு ரூ.544 குறைந்துள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.39,656-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும்  குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.75-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.73.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.73,500-க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.744 குறைந்திருப்பது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க...

முட்டைக்குள்ளும் Diet இருக்கு- தெரியுமா உங்களுக்கு!

நோயாளி வயிற்றுக்குள் சிக்கிய கத்திரி- அறுவை சிகிச்சையில் நடந்த அலப்பறை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)