News

Wednesday, 15 June 2022 11:42 AM , by: Poonguzhali R

Gold prices plummet!

தங்கம் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. தங்கத்தின் விலையில் கடந்த சில தினங்களாக குறைவு ஏற்பட்டுக் கொண்டே வருகின்றது. அந்த வரிசையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலையினை இப்பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!

 

ஜூன் 1ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் தொடர்ச்சியில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது என்பது இன்னும் மகிழ்வைத் தரும் செய்தியாக உள்ளது.

ஜூன் 2ஆம் தேதி தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தங்கத்தின் விலை ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில் நேற்றான செவ்வாய் அன்று அதிரடியாகக் குறைந்துள்ளது.

மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!

 

இந்நிலையில், நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்துள்ளது. எனவே, ஒரு கிராம் தங்கமானது 4,740க்கு விற்பனையாகிறது. அதன் படி, ஒரு சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி? இன்றே விண்ணப்பியுங்கள்!

இந்த நிலையில், இன்று (புதன்) தங்கத்தின் விலை சவரனுக்கு 200ரூபாய் குறைந்துள்ளது என்பது தங்கப் பிர்யர்களிடையே இன்னும் மகிழ்வைத் தருகிறது. சென்னையில், ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,715க்கும், சவரன் 37,720ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால், இன்று தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 

பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!

தங்கம் விலை ரூ.760 சரிவு- உடனே நகைக்கடைக்குப் போங்க!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)