நீண்ட இழை பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 ஹெக்டர் பரப்பளவில் செயல்படுத்திட ”நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (8.1.2022) தொடங்கி வைத்தார்.
1.பருத்தி சாகுபடி- இடுபொருட்களுக்கு அரசு சார்பில் மானியம் எவ்வளவு?
நீண்ட இழை பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 ஹெக்டர் பரப்பளவில் செயல்படுத்திட ”நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற புதிய திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (8.1.2022) தொடங்கி வைத்தார். எனவே, பருத்தி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் ஆளில்லா வான்வெளி வாகனம் மூலம் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிப்பதற்கான வாடகை எக்டருக்கு 1250 ரூபாயும், வேளான் சுற்று சூழ்நிலை சார்ந்த பூச்சி மேலாண்மைக்கு எக்டருக்கு 4200 ரூபாயும், ஒருங்கிணைந்த உரச்சத்து மேலாண்மை தொகுப்புகள் வழங்க எக்டருக்கு 1400 ரூபாயும், அடர் நடவு முறைக்கு எக்டருக்கு 4900 ரூபாயும் என எக்டருக்கு மொத்தமாக 11,750 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுவதாக தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, ட்ரக் வாங்க அதிகபட்சம் ரூ.75 இலட்சம் வரை மானியத்துடன் கடனுதவி
அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை (நீட்ஸ்) 2012-13 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த, திட்டத் தொகை ரூ.10.00 இலட்சத்துக்கு மேலும் ரூ.500.00 இலட்சத்தை மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனுற குறைந்த பட்சம் +2 தேர்ச்சி - பட்டம் - பட்டயம் - தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது 21-க்கு குறையாதிருக்க வேண்டும். தனிநபர் மட்டுமன்றி தகுதி பெற்ற ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்த கூட்டாண்மைப் பங்குதாரர் (பார்ட்னர்ஷிப்) அமைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். பட்டியல் பழங்குடி இனத்தினர் ஆட்டோ, டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பேருந்து, மினி பஸ், சரக்கு போக்குவரத்துக்கான லாரி, ட்ரக், போன்றவற்றை இத்திட்டத்தில் மானியத்தில் பெறலாம்.
3.2 லட்சம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
நாட்டில் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளில், 2 லட்சம் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS), பால் பண்ணை மற்றும் மீன்வளக் கூட்டுறவு சங்கங்களை அமைக்க, மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ”நபார்டு(NABARD), தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) ஆகியவற்றின் ஆதரவுடன் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மண்புழு உரம் தயாரிப்பு முறையை வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்
4.இம்முறை விவசாயிகளின் கருத்துகள் கொண்டு வேளாண் நிதிநிலை தயாரிப்பு
2023-2024 வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு விவசாயப் பெருமக்களும், பொதுமக்களும் உழவன் செயலி - வேளாண் நிதிநிலை அறிக்கை பக்கம், அல்லது tnfarmerbudget@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது வாட்ஸ்அப் எண் 9363440360 உள்ளிட்டவை மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். கடிதங்கள் வழியே கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய முகவரி வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலர், வேளாண்மை உழவர் நலத்துறை, தலைமைத் செயலகம், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600009 முகவரிக்கும் கடிதங்கள் அனுப்பலாம். இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் உங்கள் கருத்துக்கள் முக்கியம் என தமிழக வேளாண் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
5.இந்திய வேளாண் பொருட்களுக்கு வெளிநாட்டில் தேவை அதிகரிப்பு: மாவட்ட அட்சித்தலைவரின் கூற்று
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (அபேடா) 37-வது நிறுவன தினத்தை முன்னிட்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி மேம்பாட்டுப் பயிற்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.நடராஜன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில், திருவள்ளூர் மாவட்டம் வேளாண் ஏற்றுமதியில் தமிழ்நாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு நெல், வேர்க்கடலை, காய்கறி மற்றும் பழ வகைகள் அதிகமாக பயிரிடப்படுவதும், மேலும் சென்னை துறைமுகம் மிக அருகாமையில் இருப்பதும் ஏற்றமதிக்கு சாதகமான சுழல் ஆகும் என்றார். வேளாண் விளைபொருட்களுக்கு உள்ள சந்தையை விவசாயிகள், தொழில் முனைவோர், ஏற்றுமதியாரளர்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
6.4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் நேரடி ஆய்வு
தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி 2 நாட்கள் சேலத்தில் தங்கியிருந்து சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தனி விமானம் மூலம் நேற்று காலையில் சேலம் காமலாபுரம் விமானம் நிலையத்திலிருந்து புறப்பட்டார். இதையடுத்து ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் மக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து சாலையோரம் நின்ற மாணவ-மாணவிகளை சந்தித்து பேசினார். பின்னர் சேலம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த தொழில் துறை மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ-மாணவிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.
7.PMFAI தனது 17வது சர்வதேச பயிர்-அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் தொடங்கியது
இந்திய பூச்சிக்கொல்லிகள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஃபார்முலேட்டர்கள் சங்கம் (PMFAI) ஏற்பாடு செய்த 17வது சர்வதேச பயிர்-அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நேற்று துவங்கியது இது இன்றும் நடைபெற்றது. ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை அமைச்சகத்தின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ஆதரவுடன், இந்திய பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்கள் மற்றும் ஃபார்முலேட்டர்கள் சங்கம் (PMFAI) இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது. இந்தியாவின், வேளாண் உள்ளீடுகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளவர்களுக்கு, இது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
மேலும் படிக்க:
ரூ.11,750 பருத்தி விவசாயிகளுக்கு மானியம்| ஜிங்க் சல்பேட் (அ) ஜிப்சம் உரத்திற்கு 50% மானியம்
விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைபொருட்களை விற்கலாம்