பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி. அடுத்த மாதம் 8வது தவணை பயனாளிகளின் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பி.எம். கிசான் திட்டம்
பிஎம் கிசான் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 என மூன்று தவணைகளில் ரூ.2000 வீதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை கடந்த 20219ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அதனை தொடங்கி வைத்தார்.
8வது தவணை
இந்த திட்டத்தின் கீழ் 7-வது தவணை கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 25 அன்று வெளியிடப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ரூ.18,000 கோடியை சுமார் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து 8வது தவணை அடுத்த மாதம் விநியோகிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பி.எம் கிசான் திட்டத்தின் 8-வது தவணை விநியோகம் தொடர்பான முக்கிய விவரங்கள்:
விவசாயிகள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே...
-
பி.எம். கிசான் திட்டத்தில் இணைய ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பதிவு செய்யலாம்.
-
ஆன்லைனில் விண்ணப்பிக்க, விவசாயிகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/-க்கு செல்ல வேண்டும். முகப்புப்பக்கத்தில் உள்ள விவசாயியின் போர்டல் பிரிவில், அவர்கள் ‘New Farmer Registration’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, பெயர், ஆதார் எண், மொபைல் எண், வங்கி விவரங்கள் போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும். இறுதியாக படிவத்தை சமர்ப்பிக்கவும்.
-
ஆஃப்லைனில் பதிவு செய்ய, விவசாயிகள் அருகிலுள்ள பொதுவான சேவை மையங்கள் அல்லது சி.எஸ்.சி.களை அணுக வேண்டும்.
-
விவசாயிகள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் - நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த விவசாயிகள் ’இத்திட்டத்தில் பதிவு செய்யலாம். ஆனால், வருமான வரி செலுத்தும் விவசாயிகள், நிறுவன நில உரிமையாளர்கள் அல்லது 10,000 க்கு மேல் மாத ஓய்வூதியம் பெற்ற ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்திற்ல் சேர முடியாது.
-
பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயமாகும். இது தவிர, நில உரிமையாளர் ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
-
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவசாயிகள், பி.எம் கிசானின் நிலையை சரிபார்க்கலாம் ...
To check PM Kisan status
-
பி.எம் கிசான் தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் விவசாயிகள், PM கிசான் ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் - 011-24300606, 155261/1800115526
மேலும் படிக்க...
புதிய வேளாண் கருவிகளை தயாரிக்க தொழில்துறையினருக்கு அழைப்பு! - தமிழ்நாடு வேளாண் பல்கலை!
‘இனிப்பு புரட்சி’-யில் இலக்கை எட்டவிருக்கும் தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கம்!!
வீட்டுத் தோட்டம் அமைக்க சொட்டு நீர் உபகரணங்களுக்கு மானியம்! அனைவருக்கும் அழைப்பு!!