சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணை விலையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயித்து வருகிறது.
சமையல் எரிவாயு விலை குறைப்பு(Reduction in cooking gas prices)
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் மற்றும் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு விலையை குறைக்க உச்சவரம்பு விலை நிர்ணயத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து குழாய் மூலம் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் சி.என்.ஜி விலை 10 சதவீதம் வரை குறைகிறது.
சர்வதேச சந்தை நிலவரப்படி இந்தியாவில் சி.என்.ஜி மற்றும் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் கேஸ் விலை கடந்து ஒரே ஆண்டில் மட்டும் 80 சதவீதம் வரை விலை உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..!! அடுத்த மாதம் முதல் அதிரடி மாற்றம்..!!
அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% ஆக உயர்வு: மாநில அரசு அறிவிப்பு!