பள்ளி மாணவ, மாணவியர் பஸ் படிக்கட்டில் தொங்குவது தொடர்கதையாகி வருகிறது. பள்ளி நிர்வாகமும், காவல்துறையும் எச்சரித்தாலும், சில பகுதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கிராமப்புறங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரப் பேருந்துகள் வந்து சேரும் நேரம் மற்றும் இடத்தை அறியும் வகையில் சென்னை பேருந்து என்ற புதிய செயலியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கூடுதல் போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை, மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அவர், “சென்னையில் 3454 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து பேருந்துகளிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இன்று சென்னை பேருந்து செயலி மூலம் சென்னை பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பேருந்து எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.”
தொடர்ந்து பேசிய அமைச்சர், “கொரோனா காலத்தில் இருந்து அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அரசு பஸ்களில் பயணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு சில இடங்களில் பள்ளி மாணவ, மாணவியர் படிக்கட்டில் பயணிக்கும் பேருந்தின் இருப்பிடத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
புதிய பேருந்துகளை வாங்கும் போது தானியங்கி கதவுடன் வாங்க திட்டமிட்டுள்ளோம். கிராமப்புறங்களிலும் இதுபோன்ற பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான இலவச பேருந்துகள், சில இடங்களில் நிற்பதில்லை என்ற புகார் குறித்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து நிறுத்தங்களிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ”
பேருந்துகளின் இயக்கம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக கோயம்பேட்டில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9445014450, 94450 14436 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
மேலும், தமிழகம் முழுவதும் 1,500 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும். அதிக கட்டணங்களுக்கு 044-24749002, 18004256151 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் படிக்க..
தளர்த்தப்பட்டுள்ள துறைகள் மற்றும் சேவைகள் குறித்த அறிந்து கொள்ளுங்கள்
தமிழகத்தில் தொடங்கிய பஸ் பயணம்,பயணிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.