சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 28 October, 2022 8:00 AM IST
Good news for school teachers
Good news for school teachers

நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவனல்லா, கூடலூர் பகுதிகளில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து உதகை பிரிக்ஸ் பள்ளியில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

அடிப்படை கட்டமைப்பு

செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிகவும் பழுது அடைந்த பள்ளி கட்டிடங்களும் பொது பணித்துறையின் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித் துறைக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கூடுதலாக 1500 கோடி ரூபாயை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பள்ளி கல்வி துறையில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 3 மாதத்திற்குள் படிப்படியாக நிரப்பப்படும்.

பதவி உயர்வு

தற்போது 3200 பேருக்கு முதுநிலை ஆசிரியர்கள் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பினால் அனுபவம் வாய்ந்த முதுநிலை ஆசிரியர்கள் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது என்பதை உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு சார்பில் விரிவான பிரமாண பத்திரம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மேலும் படிக்க

1000 ரூபாய் போதும்: கல்லூரி மாணவர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்!

மெகா வேலைவாய்ப்பு திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தொடக்கம்!

English Summary: Good news for school teachers: Minister's great announcement!
Published on: 28 October 2022, 08:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now