1. செய்திகள்

மெகா வேலைவாய்ப்பு திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தொடக்கம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Mega Employment scheme

இந்தியாவில் வேலையின்மைப் பிரச்சினை நீண்ட காலமாகவே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அரசு தரப்பிலிருந்து நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் இல்லை இன்று கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அதன் மூலம் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

வேலைவாய்ப்பு திட்டம்

சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 22) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு பெற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு பிரச்சாரங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு மேளா புதிய வடிவம் அளித்துள்ளது.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கருத்தில் கொண்டு மத்திய அரசு 75,000 இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பணி நியமனக் கடிதங்களை வழங்கி வருகிறது. ஒரே நேரத்தில் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் ஒரு பாரம்பரியம் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இதனால் திட்டப்பணிகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கூட்டு மனோபாவம் துறைகளில் உருவாகிறது. வரும் நாட்களிலும், தேர்வர்கள் அவ்வப்போது அரசிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெறுவார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜக ஆளும் பல மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதேபோன்ற மேளாக்களை ஏற்பாடு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அமிர்த காலத்தில், வளர்ந்த இந்தியாவின் உறுதியை நிறைவேற்றுவதற்காக நாம் தற்சார்பு இந்தியா என்ற பாதையில் முன்னேறி வருகிறோம். இந்தியாவை தன்னம்பிக்கை பாதைக்கு கொண்டு செல்வதில் புதுமையாளர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களுக்கான தேர்வுப் பணியை சில மாதங்களில் முடித்து பணி நியமனக் கடிதங்களை வழங்குவது, கடந்த 7-8 ஆண்டுகளில் அரசு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது. இன்று வேலை கலாச்சாரம் மாறி வருகிறது. நமது கர்மயோகிகளின் முயற்சியால் அரசுத் துறைகளின் செயல்திறன் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் சுய சான்றொப்பம் மற்றும் நேர்காணலை ரத்து செய்தல் போன்ற நமது ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இளைஞர்களுக்கு உதவியுள்ளன” என்று கூறினார்.

இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளதாகவும், கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் படிக்க

தீபாவளிக்கு ஊருக்கு செல்ல தட்கலில் ரயில் டிக்கெட்: ஈஸியான வழிமுறை இதோ!

PM Kisan திட்டம்: போஸ்ட் ஆபிஸ் போனாலே போதும் விவசாயிகள் இதைச் செய்ய!

English Summary: Mega Employment Scheme: Launched by Prime Minister Narendra Modi! Published on: 24 October 2022, 10:24 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.