சென்னையில் பெரும்பாலான மக்கள் ஷேர் ஆட்டோ பயணத்தை நாடுகின்றனர். மக்களுக்கு அனைத்து நேரங்களிலும் சேவை அளிக்கும் ஷேர் ஆட்டோவை ஒழுங்குபடுத்தவும், அங்கீகரிக்கவும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
ஷேர் ஆட்டோ பயணம்
தமிழகத்தில் அரசு பேருந்துக்கு அடுத்ததாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்து வாகனமாக ஷேர் ஆட்டோ உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் காலை மற்றும் மாலை வேளையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். இத்தகைய நேரத்தில் மக்கள் பேருந்துக்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.
இந்த நிலையில் தான் மக்கள் ஷேர் ஆட்டோ பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த ஷேர் ஆட்டோ அனைத்து நேரங்களிலும் மக்கள் வசதிக்கு ஏற்ப இயக்கப்பட்டு வருகிறது. குறுகிய தூர பயணங்களுக்கு விரைவான போக்குவரத்திற்கு மக்கள் அதிகம் ஷேர் ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் ஷேர் ஆட்டோக்களை பொது போக்குவரத்தின் ஒரு பகுதியாக மாற்ற முன்மொழிந்துள்ளது.
தற்போது சென்னை நகர கூட்டமைப்பு திட்டத்தின் கீழ் இடைநிலைப் போக்குவரத்து திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதன் கீழ் பேருந்துகளை இயக்க முடியாத பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசு ஷேர் ஆட்டோவை ஒழுங்குபடுத்தவும், அங்கீகரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மிக குறைந்த விலையில் தென்னை மரம் ஏறும் கருவி: புதுக்கோட்டை விவசாயியின் அனுபவம்!
பெனசன் இணையதளங்களை ஒருங்கிணைக்கும் மத்திய அரசு: அமைச்சர் தகவல்!