தனது புதிய திட்டத்திற்காக ஆடுகளை வேலைக்கு அமர்த்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தனது ஸ்ட்ரீட் வியூ திட்டத்துக்காக ஆடுகளை வேலைக்கு அமர்த்த கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கூகுள் மேப்ஸ் வசதியின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக வெளிவரவுள்ளது ஸ்ட்ரீட் வியூ திட்டம். இத் திட்டத்தின் முக்கிய நோக்கம் உலகின் மூலை முடுக்குகளை 360 டிகிரி கோணத்தில் காட்டுவதே ஆகும்.
ஆடுகளின் மீது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களுடன் இணைக்கப்பட்ட கேமிராக்களைப் பொருத்தி அதன் மூலம் வீடியோ பதிவுகளை கூகுள் எடுக்க இருக்கிறது.
இங்கிலாந்தில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லா தீவுகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை எடுக்கவிருப்பதாகவும், அண்டார்டிகா, அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்படுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: