1. செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Electricity Price Hike In Tamil Nadu

தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2026-27 ஆம் ஆண்டு வரை புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் அமலில் இருக்கும். 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாம் என நினைப்பவர்கள் விட்டுக்கொடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு எவ்வளவு?

  • 2 மாதங்களுக்கு 101 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு ரூ.55 உயர்வு

  • இரண்டு மாதங்கள் 300 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு ரூ.155 அதிகரிப்பு

  • 400 யூனிட்கள் வரை இரண்டு மாதங்களுக்கு ரூ.295 உயா்த்தப்பட்டுள்ளது

  • மொத்தம் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு ரூ.595 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

  • 500- 600 யூனிட்கள் வரை மின் நுகா்வு செய்தால் இரண்டு மாதங்களுக்கு ரூ.310 உயர்வு

  • 700 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.550 அதிகரிப்பு

  • 800 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.790 உயர்வு

  • 900 யூனிட்கள் வரையிலான பயன்பாட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.1,130 அதிகரிப்பு

இனி ஒரே மின் கட்டணம்

வீட்டு பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டது. 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும் போது மின் கட்டணத் தொகையானது ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டது. ஆனால் இனிமேல் 500 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்தினாலும் அதே விலையில் தான் கணக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

ரூ.30 அயிரம் சம்பளத்தில் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை

3 மாதத்தில் ரேஷன் கார்டு ரத்து? இது உண்மையா? விவரம்

English Summary: Electricity tariff hike in Tamil Nadu! Do you know how much? Published on: 10 September 2022, 01:49 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.