மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 July, 2021 9:18 AM IST
Credit : Tamil Spark

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பதே மிகப்பெரியக் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், ஷிப்ட் முறையில் வகுப்புகளைத் தொடங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

பள்ளிகள் இயங்கவில்லை (Schools are not running)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டப் பள்ளிகள் இதுவரைத் திறக்கப்படவில்லை. 

தேர்வுக்குத் தயாராகும் வகையில் வகுப்புகள் நடத்தப்பட்ட போதிலும், 12ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டன. கொரோனா வைரஸ்ஸின் 2-வது அலை காரணமாக இறுதியில் 10 மற்றும்12 வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தேர்வின்றித் தேர்ச்சி (Pass without selection)

சுமார் ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் மூடுப்பட்டதுடன், பிற வகுப்பு மாணவர்கள் தேர்வின்றிச் தேர்ச்சி அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. எனினும், கட்டணம் வசூலிக்க ஏதுவாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தின தனியார் பள்ளிகள். இதன் காரணமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களைப் படிக்க வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது.

 

தேர்வுகள் ரத்து (Cancel exams)

தேர்வுக்குத் தயாராகும் வகையில் வகுப்புகள் நடத்தப்பட்ட போதிலும், 12ம் வகுப்பிற்கு செய்முறைத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டன. கொரோனா வைரஸ்ஸின் 2-வது அலை காரணமாக இறுதியில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தேர்வின்றித் தேர்ச்சி (Pass without Exam)

சுமார் ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் மூடுப்பட்டதுடன், பிற வகுப்பு மாணவர்கள் தேர்வின்றிச் தேர்ச்சி அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. எனினும், கட்டணம் வசூலிக்க ஏதுவாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தின தனியார் பள்ளிகள். இதன் காரணமாக மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களைப் படிக்க வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது.

டவர் பிரச்னை (Tower problem)

இருப்பினும், கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு தொலைத்தொடர்பு கோபுரத்தில் சிக்னல் கிடைக்காதது உள்ளிட்ட சில நடைமுறைச் சிக்கல் காரணமாக, பாடங்களைக் கவனிக்க முடியாத சூழல் உருவானது.

அதிரடி நடவடிக்கை (Action)

அதேநேரத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், இரவு நேர ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

தொற்றுப் பாதிப்பு குறைந்தது (The risk of infection is low)

இதன் பலனாக ஆரம்பத்தில் 30 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 2500 ஆகக் குறைந்துள்ளது. எனவே பள்ளிகள் எப்போதுத் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே உருவாகியுள்ளது. குறிப்பாக பாலர் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ந்த பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதுவையில் திறப்பு (Opening in Puducherry)

இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகள் வரும் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்திலும் எதிர்பார்ப்பு (Expectation in Tamil Nadu too)

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதே தற்போதையக் கேள்வியாக உள்ளது. இதையடுத்து பள்ளிகளைத்திறக்க வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ள தமிழக அரசு அதற்காக கல்வியியல் நிபுணர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆலோசனைகளைப் பெற்று வருகிறது.

ஷிப்ட் முறையில் (In shift mode)

குறைந்தபட்சம் ஷிப்ட் அடிப்படையில் 2 மணி நேரமாவது பள்ளிகளைத் திறந்து மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டுமென தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இருப்பினும் பெற்றோர் என்ன நினைக்கின்றனர் என்பதே முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பெற்றோர் கருத்து (Parental feedback)

ஒரு தரப்பு பெற்றோர் பள்ளிகளைத் திறக்க ஆதரவு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் அடுத்துத் தாக்க உள்ள கொரோனா 3-வது அலை குறித்த மருத்துவர்களின் எச்சரிக்கையைக் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

பரிசீலனை (Review)

இதையடுத்து விரைவில் தமிழகத்தில் 9,10, 11 12 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறந்து, ஷிப்ட் முறையில் பாடம் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசித்து வருகிறார்.

ஆகவே விரைவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வகுப்புகள் நடத்த பரிசீலனை அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தகவல் (Minister Information)

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கூறுகையில்,
புதுவை அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதனை அடிப்படையாகக் கொண்டு, துறை சார்ந்த அதிகாரிகளின் முடிவுகளை முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்வோம்.

இன்றையக் கொரோனா சூழலைப் பொறுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன வழிமுறைகளைத் தெரிவிக்கிறாரோ அவற்றைப் பின்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

அரசு தரும் ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிரமமா? இதை செய்யுங்கள்

வேளாண்,உணவுத்துறை அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டலின் அதிரடி உத்தரவு!!

 

English Summary: Government advises on opening schools in Tamil Nadu - shift system!
Published on: 14 July 2021, 09:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now