நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 October, 2021 5:27 AM IST
100% seats in bus and cinema theaters

சினிமா தியேட்டர், பஸ்களில் 100 சதவீத இருக்கை மற்றும் விளையாட்டுபோட்டிகள் நடத்த அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

  • நவ.,1-ம் ததி முதல் சினிமா தியேட்டர்களில் (cinema theaters) 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்படும்.
  • அதே போல் அனைத்து வகையான படப்படிப்புகளும் நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்படும். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் பணியாளர்கள் கலைஞர்கள் கட்டாயம் தடுப்பூசி (Vaccine) போட்டிருக்க வேண்டும்.
  • சாதாரண மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் 100 சதவீதம் வரை பயணிகள் பயணிக்க (Passengers) அனுமதி. கேரளா மாநிலம் தவிர்த்து பிற மாநிலங்களுக்கு சென்று வரும் பஸ்களிலும் 100 சதவீதம் வரை அனுமதி
  • அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வது வரையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படும். அரசு பயிற்சி நிலையங்கள் மற்றும் மையங்கள் 100 சதவீதம் பயிற்சியாளர்களுடன் இயங்க அனுமதி
  • பண்டிகை மற்றும் சமுதாய நிகழ்வுகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் பார்களுக்கு அனுமதி
  • அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி கொள்ள அனுமதி.சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி
  • 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
  • கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள அனுமதி
  • அனைத்து வகை கடைகள் மற்றும் உணவு கூடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.
  • திருவிழாக்கள், அரசியல் நிகழ்வுகளுக்கு தற்போது உள்ள கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறது.

மேலும் படிக்க

வெப்பநிலை மாற்றத்தால் இந்தியாவில் பாதிப்பு: ஆய்வில் தகவல்!

100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா அபார சாதனை!

English Summary: Government of Tamil Nadu allows 100% seats in bus and cinema theaters!
Published on: 24 October 2021, 05:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now