1. செய்திகள்

வெப்பநிலை மாற்றத்தால் இந்தியாவில் பாதிப்பு: ஆய்வில் தகவல்!

R. Balakrishnan
R. Balakrishnan
Climate Change

இந்தியாவில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு, கடந்த 1990ம் ஆண்டு இருந்ததை விட, 15 சதவீதம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

பருவநிலை மாறுபாடு

பருவநிலை மாறுபாடு மற்றும் மனிதர்களின் உடல்நலம் மற்றும் காலநிலைக்கு இடையிலான தொடர்பு குறித்து, 'தி லான்செட்' அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்து உள்ளதாவது:

உலகளவில் வெப்பத்தின் தாக்கத்தால் கடந்த 2020ல் 65 வயதுக்கு மேற்பட்டோரில் 310 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இந்தப் பட்டியலில் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இடம்பிடித்தனர்.

மேலும், 2020ல் ஏற்பட்ட கடும் வெப்பத்தால், 29,500 உழைக்கும் மணி நேரம் வீணானது. குறிப்பாக மனித வளம் அதிகமுள்ள பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியாவில் இந்த இழப்பு அதிகமாக இருந்தது. அதேபோல் கடந்த 2018, 2019ல் இந்தியா, பிரேசிலில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டன. இந்தியாவில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு, கடந்த 1990ம் ஆண்டு இருந்ததைவிட 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. லான்செட் கவுன்ட்டவுன் இயக்குநர் அந்தோனி காஸ்டெல்லோ கூறுகையில், 'பருவநிலை மாறுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் மனிதர்களுக்கு உடல்ரீதியான பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை இல்லாத வகையில் வறட்சியும், பஞ்சமும் பரவலாக அதிகரித்துள்ளது, 2021ம் ஆண்டு அறிக்கை படி, 134 நாடுகளில் காட்டுத் தீ பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது' என்றார்.

 

Read More

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குளில் பேட்டரி விற்பனை!

நெகிழ்ச்சி சம்பவம்: உயிரிழந்த தாய்க்கு சிலை அமைத்த மகன்!

English Summary: Impact of climate change in India: study information!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.