தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 14 வகையாக அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. இருப்பினும், அந்த பொருட்களில் சில பொருட்கள் காலவதியாகி இருப்பதாக தகவல் வெளிவந்ததை அடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே சமயம் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கிடைக்கவும், பொருட்களின் தரத்தை உறுதி செய்யவும், குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கால தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களின் தரம், இருப்பு விவரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும் ,ஆய்வில் காலாவதியான பொருட்கள் இருந்தால் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், காலாவதியான பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் இருந்தால் அப்பகுதி ஆய்வு அலுவலரே அதற்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அனைத்து மண்டல பொறுப்பாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்தார்.
நியாயவிலை கடைகளில் நடத்தப்படும் ஆய்வின்போது பாமாயில், டீத்தூள் போன்ற பொருட்கள் காலாவதியான பொருட்களாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்திட வேண்டும் என்றும் காலாவதியான பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்தால் அப்பகுதி ஆய்வு அலுவலரே அதற்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் டகேறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரேஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!
ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் 14 மளிகை பொருட்களின் முழு விவரம்
குடும்ப தலைவிக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை” அனைவருக்கும் கிடையாது.