பொதுப்பணித்துறை சார்பில் மாதம் தோறும் கண்காணிப்பு கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீடு, முந்தைய ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பிட்டு அரசுக்கு அறிக்கையாக அளிக்கப்படுகிறது. ஏப்ரல் மாத கணக்குப்படி, அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 0.55 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் சரிந்துள்ளது.
நிலத்தடி நீர் (Ground Water)
தஞ்சை, நாகை, அரியலுார், ராமநாதபுரம், சிவகங்கை, துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் சிறிதளவு சரிவு கண்டறியப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
நிலத்தடி நீரைக் குறையாமல் பாதுகாப்பது நமது கடமையாகும. வானிலிருந்து தண்ணீரை வரவழைக்க வேண்டுமே தவிர, நிலத்திலிருந்து தண்ணீரை எடுக்க கூடாது. நிலத்தடி நீரின் மட்டம் குறைவதால், உருவாகும் பிரச்சினைகள் அசாதாரணமானது.
மரங்களை வளர்ப்போம், மழை நீரைச் பெறுவோம் என்பதன் கூற்றுப்படி, அனைவரும் மரங்களை நட்டு பராமரித்துப் பாதுகாக்க வேண்டும். இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
மேலும் படிக்க