1. செய்திகள்

கத்திரி வெயில் ஆரம்பம்: இனி அதிகபட்ச வெப்பநிலை தான்!

R. Balakrishnan
R. Balakrishnan

கத்திரி வெயில் இன்று தொடங்கி, வருகின்ற மே மாதம் 28 ஆம் தேதி முடிவடைகிறது. அக்னி நட்சத்திர நாட்களில், கோடை வெயிலின் தாக்கமானது உச்சத்தில் இருக்கும், என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். இதனால், ஏற்படும் அதிகபட்ச வெயிலானது 25 நாட்கள் வரை இருக்கும். ஆகவே, தேவையின்றி மக்கள் வெளியில் செல்வதை தவிர்ப்பது தான் சிறந்தது.

அக்னி நட்சத்திரம் (Agni Star)

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 10 மாவட்டங்களில், வெப்பநிலையானது 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் வெப்பநிலை பதிவானது. பொதுவாகவே, வேலூர் மாவட்டத்தில் பாறைகள் அதிகளவில் இருப்பதால், அங்கு வெப்பநிலை எப்போதும் அதிகமாக இருக்கும். மேலும், பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுத்தப்படுகிறார்கள்.

அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், தமிழ்நாட்டில் சில இடங்களில், வெப்பநிலையானது தற்போது இருப்பதைக் காட்டிலும் அதிகபட்சமாக 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும், நடப்பாண்டில் கத்திரி வெயில் இன்று மே 4 முதல் மே 28 வரை, மொத்தமாக 25 நாட்கள் நீடிக்கும். கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்பநிலை, சில இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும். குறிப்பாக, வேலூர் மற்றும் திருத்தணி உள்ளிட்ட சில மிக முக்கிய நகரங்களில், வெப்பநிலையானது, 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்ட வாய்ப்புள்ளது என்றும், பகலில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கத்திரி வெயில் (Summer Heat)

கத்திரி வெயில் ஒருபுறம் ஆரம்பித்தாலும், அந்தமான் பகுதியின் அருகே வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருக்கிறது. இதனால், தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை குறையவும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் வானம் மேக மூட்டத்தோடு காணப்பட்டது. இதனால், வெயில் குறைந்திருக்க மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர்.

மேலும் படிக்க

மே 4 இல் துவங்குகிறது அக்னி நட்சத்திரம்: வெயிலில் கவனம் தேவை!

கோடை விடுமுறை அறிவிப்பு: மகிழ்ச்சியில் மாணவர்கள்!

English Summary: The beginning of the Agni Star: the maximum temperature is no longer! Published on: 04 May 2022, 08:49 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.