News

Tuesday, 19 April 2022 02:09 PM , by: Dinesh Kumar

Ground Water Level Rises...

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்த 4 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை மீண்டும் கூடியது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

 இதற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் பதிலளித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கொள்கை அறிக்கையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான வறட்சி கண்காணிப்பு மையங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் பற்றி பார்க்கலாம்.

மாநில அளவிலான வறட்சி கண்காணிப்பு மையம், இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய தொலையுணர்வு மையம், தேசிய பயிர் நிலவரங்கள் முன்கணிப்பு மையம், மாநில நீர்வள ஆதார மையம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை ஆகியவற்றின் உள்ளீடுகளை பெற்று மாநில அளவில் வறட்சி நிலையை மாநில மற்றும் மாவட்ட அளவிலான வறட்சி கண்காணிப்பு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

2021-ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் மட்டும் 17 சதவீதம் மற்றும் 59 சதவீதம் மழை பெய்துள்ளது. மாநில நீர்வளத் துறையின் நிலத்தடி நீர்மட்ட ஆய்வுகளின்படி, பிப்ரவரி 2021-ல் இருந்து நீர்மட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போது பிப்ரவரி 2022- ல் மொத்த 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.24 முதல் 4.59 மீட்டர் வரை அதிகரித்திருப்பது குறிப்பிடதக்கது.

மற்ற 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.12 முதல் 0.47 மீட்டர் வரை குறைந்துள்ளது. மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒரு பகுதியாக செயல்பட அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான வறட்சி கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையம் மாவட்ட ஆட்சியரின் தலைமை மற்றும் கட்டுப்பாட்டின் செயல்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டில், இயல்பை விட அதிகம்! ஆய்வில் தகவல்!

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த புதிய முயற்சி: குறைந்துள்ளது ஆழ்குழாய் நீரின் தேவை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)