GST குறித்த விவகாரங்களில் சட்டம் இயற்ற மாநில அரசுகலூக்கு முழு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்த செய்தியின் முழு சாரங்களை இப்பதிவு குறிப்பிடுகிறது.
இந்தியாவில் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோதே அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், மாநிலத்தில் வரி விதிப்பு அதிகாரங்கள் பறிக்கப்படுகிறது என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளான பல கட்சிகள் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்தன.
இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு GST-யில் சிக்கல் இருப்பதாக GSTகவுன்சில் அமைப்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தன் கருத்துக்களைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதினார். அதோடு மாநிலங்களுக்கு கூடுதல் வரி வதிப்பு குறித்தான தனித்த செயல்முறைக்கான அதிகாரங்கள் தேவை எனவும் வலியுறுத்தினார்.
தற்போது வரை இழுபறியாக இருந்த இந்த வழக்கில் GST குறித்த விஷயங்களில் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
இந்த வழக்கை மோகித் மினரல்ஸ் நிறுவனம் தொடர்ந்தது. நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடந்த வழக்குக் குறித்த அமர்வில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. GST கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது எனவும் GST கவுன்சிலின் பரிந்துரைகள் ஒரு தூண்டுகோலாக மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், GST குறித்த செயல்களில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் சமமான அதிகாரங்கள் இருக்கின்றன எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றினை ஒன்று சார்ந்துதான் இருக்கின்றன என்றும் இந்தியா, கூட்டாட்சி தத்துவ நாடு என்பதால் GST கவுன்சில் பரிந்துரைக்க மட்டுமே முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
GST கவுன்சில் அறிவுரைகள் மற்ரும் பரிந்துரைகளை மட்டுமே வழங்க வேண்டும் எனவும், இந்த பரிந்துரைகளை நீங்கள் செய்தே தீர வேண்டும் என மாநில அரசுகளை நிர்பந்திக்க அதிகாரம் இல்லை எனவும் கூறியுள்ளது, உச்ச நீதிமன்றம்.
இந்த தீர்ப்பை சமூக ஆர்வலர்கள் பலர் ஆதரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
மாதம் ரூ. 5,000 போதும் 1 லட்சம் பென்சன் வாங்கலாம்!
பேரறிவாளனின் விடுதலை நம்பிக்கையை அளித்துள்ளது: நளினியின் தாயார்