இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 25 June, 2021 11:12 AM IST

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் கொரோனா நிவாரணம் மற்றும், மளிகைப் பொருட்கள் தொகுப்பைப் பெற இன்றே கடைசி நாள் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)

தமிழகத்தில் கொரோனா வைரஸ்ஸின் 2-வது அலை பரவி வருகிறது.  அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தபோதிலும், மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.

ஊடரடங்கு தளர்வுகள் (Intermittent relaxations)

நோய் தொற்றில் இருந்து தப்பிப்பது ஒருபுறம், வேலைக்குச் செல்லாததால், சம்பளம் இன்றி தவிப்பது மறுபுறம், பலர் வேலையிழந்து, வாழ்வாதாரமின்றி தவிப்பது இன்னொரு புறம். ஊரடங்கால் தொழில்கள் நலிவடைந்திருந்த சூழலில் படிப்படியான தளர்வுகள் ஓரளவு ஆறுதலைத் தந்தன.

இயல்பு நிலை (State of nature)

தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிதும் குறைந்து வருவதால் அதிகப்படியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் மக்களின் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

கொரோனா மளிகைத் தொகுப்பு (Corona Grocery Collection)

இந்த சூழலில் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திமுக அரசு, கொரோனா நிவாரணமாக ரூ.4,000 மற்றும் 14 பொருட்கள் கொண்ட மளிகைத் தொகுப்பு ஆகியவற்றை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டது.

முதல் தவணை (First installment)

இதில் முதல் தவணையாக ரூ.2,000 கடந்த மே மாதம் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட நாட்களில் முகக்கவசம் அணிந்து போதிய சரீர இடைவெளி விட்டு வாங்கிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

2-வது தவணை (2nd installment)

இதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்தில் இரண்டாவது தவணையாக ரூ.2,000,இலவச மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவை டோக்கன் அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. டோக்கன் வாங்காதவர்களுக்கு மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் சென்று வாங்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

25க்குள் வழங்க உத்தரவு (Order to deliver within 25)

இந்நிலையில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு கொரோனா நிவாரணத் தொகை ரூ.2,000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு ஆகியவை கடந்த 15ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருட்களை வரும் 25ஆம் தேதிக்குள் விநியோகம் செய்து முடிக்க வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டு. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றேக் கடைசிநாள் (Today is the last day)

கொரோனா மளிகைப் பொருட்கள் வாங்க இன்றே கடைசி என்ற அறிவிப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் கடைகளுக்குச் சென்றால் கையிருப்பு இல்லை எனத் திருப்பி அனுப்பப்படும் நிலையில், இன்றேக் கடைசி நாள் என்பதால் ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

கால அவகாசம் (time period)

கொரோனாப் பரவலைத் தடுக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் அரசு, மளிகைப்பொருட்கள் தொகுப்பை வழங்க இன்னும் சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என ரேஷன் அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவுத்துறை விளக்கம் (Food department Description)

கையிருப்பு இல்லாத கடைகளில் விரைவில்  மளிகைத் தொகுப்பு வழங்கப்படும் எனவும் ரேசன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பை வழங்குவதற்கான கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

English Summary: Have you purchased a corona relief package? Today is the last!
Published on: 25 June 2021, 07:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now