தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது. ஆனாலும், வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள தகவல்களை இந்த பதிவு வழங்குகிறது.
வடத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப் பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனக் குறிப்பிடுகிறது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24.11.2022 மற்றும் 25.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரம் வரை வானம் பொதுவாகவே மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.
22.11.2022 காலை வரையில் `சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அதோடு, இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையலாம் எனக் கூறப்படுகிறது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனக் குறிப்பிடப்படுகிறது.
மேலும் படிக்க
கரூர்: தமிழகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்!
மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!