தென் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, அடுத்த சில மணி நேரத்திற்கு மதுரை, தஞ்சை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக, சிவகாசி (விருதுநகர்) 7. போடிநாயக்கனூர் (தேனி), குன்னூர் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி) தலா 6, எச்சன்விடுதி (தஞ்சாவூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 5, வெம்பக்கோட்டை (விருதுநகர்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பேரையூர் (மதுரை), சிங்கம்புணரி (சிவகங்கை), காரியாப்பட்டி (விருதுநகர்), விருதுநகர் AWS (விருதுநகர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
13.04.2024: தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
14.04,2024: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
15.04.2024: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
16.04.2024 மற்றும் 17.04,2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 18.04.2024 மற்றும் 19.04.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.04.2024 முதல் 17.04.2024: அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2°-3° செல்சியஸ் உயரக்கூடும்.
ஈரப்பதம்:
13.04.2024 முதல் 17.04.2024: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
13.04.2024: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுாக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
Read more:
ஒரு வாரத்திற்கு பின் தங்கம் விலை சரிவு- இன்றைய விலை என்ன?
விவசாயத்தை புரட்டிப் போட்ட டாப் 5 கண்டுபிடிப்புகள்- முழு விவரம் அறிக