இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் (Regional Meteorological Centre, Chennai) வெளியிட்டுள்ள தகவலின் படி, தமிழகத்தில் (Tamil Nadu) தற்போது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினாலும் வெப்பச்சலனம் காரணமாகவும் கோவை, நீலகிரி வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகவும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கோவை, நீலகிரி,திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்களான புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 22 (August 22 ) நாளை மதுரை, திருச்சி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தவிர ஏனைய மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் மிதமான மழை பொழியும்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் ஏனைய மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க:
ரூ.182 கோடி கரும்பு நிலுவை தொகைக்கு ஒதுக்கீடு: வேளாண் அமைச்சர்!
இந்தந்த மாவட்டங்களில் வெளுத்துக் கட்டப்போகிறது மழை- வானிலை மையம் எச்சரிக்கை!